பக்தி மணம் – ஸ்ரீ பெரியதாசர்

தஞ்சையை ஆண்ட கடைசி சில மன்னர்களில் ஒருவன் மன்னார் நாயுடு (சரித்திர ரீதியில் ஏதோவொரு ஜமீந்தாராகவும் இருக்கலாமென்றிருக்கிறது). தெய்வ பக்தியுள்ளவனாயினும் கூடாதார் நட்பு கொண்டவனாயிருந்தான்.   அவனிடம் சேஷாசல செட்டியார் என்பவர் ஷராப் ஆக இருந்து வந்தார். அவர்தம் மகன் பெயர் பெரியசாமி. மிகுந்த தெய்வ பக்தியுள்ளவர். தாமரை இலைநீர் போல உலகவாழ்க்கையில் இருந்து வந்தார். அவருடைய தெய்வ பக்தியைக் கண்ட மக்கள் அவரை பெரியதாசர் என்று அழைக்கலாயினர். ஒரு நாள் அரசன் புலவர்களை நோக்கி  “இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தொலைவில் உள்ளது?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள் தங்களால் பதிலளிக்க இயலாதென்றும் பெரியதாசர் போன்ற மகானைக் கேட்டால் ஒருவேளை பதில் கிடைக்கலாம் என்றும் உரைத்தனர். உடனே அரசன் அவரை அழைப்பித்து தன்கேள்வியைக் கேட்கவும் அவர்  “எனக்கு வைகுண்டம் எங்கிருக்கிறதென்று தெரியாது. ஆனால் கஜேந்திரன் ஆதிமூலமேஎனக் கூவிய உடன் சங்குசக்ரதாரியாய் எம்பெருமான் வந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது வைகுண்டம் இங்கிருந்து கூப்பிடும் தொலைவில் தான் இருக்க வேண்டும்என்றார். அரசனுக்கும் இப்பதில் திருப்தியளிப்பதாய் இருந்தது. அவருக்குப் பலவாறாய் சிறப்புகள் செய்வித்தான். இப்படிப்பட்டவர் தன்னைப் புகழ்ந்து பாட வேண்டுமென்ற ஆசை அவன் மனதில் எழுந்தது. அவரைக் கேட்டாலோ நரசிம்ஹனைப்பாடும் வாயால் நரனைப் பாடுவதா?”என்று கூறிவிட்டார். அரசனின் கோபத்திற்கு தூபம் போடுவது போல சிலர்  “திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனேஎன்று ஆழ்வார்கள் கூறியிருக்க இவனுக்கு எவ்வளவு திமிர்? என்று கூறவே அரசன் தண்டனைக்கான உத்தரவைப் பிறப்பித்தான். வீரர்களின் ஈட்டிகள் இவர்மீது பாய்ந்து கூர்மழுங்கி விழுந்தன. புலிக் கூண்டில் இட்டதும் புலி இவரைத் தொழுதது. நஞ்சிட்டனர். அடியவர்க்கு எதுவும் அமுதே என்றுஅதையும் அருந்தினார். யானைக்காலில் இடறச் செய்ய முயன்றனர். யானை இவரை சிம்மமாகக் கண்டு பயந்து ஒதுங்கியது. சூட்டுக்கோலால் சுடு போட்டனர். சீதோபவ ஹனூமத: என்று சீதம்மா முன்பு மாருதிக்குச் சொன்னாற் போல சூட்டுக்கோல்கள் குளிர்ந்து போயின. ஒன்றும் பலிக்காமல் போகவே கழுவில் இடுஎன்றான் அரசன். ஊர் மக்கள் அடியவருக்கா இந்தத் துன்பம் என்று வருந்திக் கண்ணீர் சொரிந்தனர். இவரோ நரசிம்ஹப் பெருமானையே தொழுது நின்றார்.

அரசவை.

மன்னன் இங்கு மிடுக்காய்அமர்ந்திருக்கிறான். திசை திறந்து அண்டங்கீறி சிரித்தது செங்கண் சீயம்என்று கம்பப் பெருமான் இரணியவதைப் படலத்தில் கூறியது போல இடியோசை போல ஓர் கர்ஜனை கேட்டது. கம்பீரமாய் அரசன் முன் தோன்றினார் நரசிம்மமூர்த்தி. பயத்தினால் நடுநடுங்கிய அரசன் குப்புற விழுந்து விட்டான். கையிலுள்ள சாட்டையினால் சுளீர்! சுளீர்!  என்று அவன் முதுகிலே அடிகள் விழுந்தன. அலறினான். நரசிம்மர்பெரியதாசனை அடித்தாயே! அவன் என்ன குற்றம் செய்தான், சொல்! சொல்!என்று மேலும் சாட்டையைச் சொடுக்கினார்.ஓடு! அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேள்என்று மேலும் ஒரு அடி அடித்து மறைந்து போனார் நரசிம்ஹஸ்வாமி.

 
‘நிறுத்து அவர்கழுவிலேற்றலை!” என்று அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினான் அரசன் . பெரியதாசர் தம் பாதங்களில் சடாரென்று விழுந்து மன்னிக்கும்படி கதறினான். அவரோநீரே பாக்கியசாலி, எனக்குக் காட்சி தராத எம்பெருமான் நரசிம்ஹமூர்த்தி உனக்கு தரிசனமளித்துள்ளார், நீரே பாக்கியவான்என்று அரசனை வணங்க கொலைக்களமாகவிருந்த இடம் கோயில் போலானது. 

இதன் பிறகு ஸ்ரீ ரங்கநாதரே அந்தணனாக வந்து ஸ்ரீரங்கம் வரும்படி இவரை அழைக்க, இவரும் பூலோக வைகுண்டத்தை அடைந்து அரங்கன் சேவையில் அகமகிழ்ந்தார். ஆழ்வார்கள் பாடிய பாடல்களை அரங்கன் முன் பாடி பரவசமான இவரை ஓரிரவில் நரசிம்ஹ வடிவமாகவே வந்து எம்பெருமான் ஆட்கொண்டார்.                                    நன்றி – ஸ்ரீ மஹா பக்த விஜயம்

பால கங்காதர திலகர் நினைவு கூறும் சுவாமி விவேகானந்தர்

 
 
1892 ஆம் ஆண்டு, அதாவது சிகாகோவில் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சமயச் சொற்பொழிவுக்கு முன்னால், ஒரு சமயம் நான் பாம்பேயிலிருந்துபூனாவிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். விக்டோரியாடெர்மினஸில் ஒரு சன்யாசி நானிருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். சில குஜராத்தி இளைஞர்கள் அவரைவழியனுப்ப வந்திருந்தனர். அவர்கள்  அந்த சன்யாசியை எனக்கு முறைப்படிஅறிமுகப்படுத்திய பின் பூனாவில் என் வீட்டில் தங்கியிருக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். நாங்கள் பூனாவை அடைந்தோம். அந்த சன்யாசி என்னுடன் எட்டுஅல்லது பத்து நாட்கள் தங்கியிருந்த அவர் அடிக்கடி அத்வைதம் பற்றியும் வேதாந்தம்பற்றியும் பேசிக்கொண்டிருப்பார். சமூகத்தினருடன்கலந்து பழகுவதை அவர் தவிர்த்தார். அவரிடம்ஒரு சிறிதும் பணமிருக்கவில்லை. ஒருமான் தோல், ஒன்று அல்லது இரண்டு உடைகள், ஒரு கமண்டலம் – இவையே அவர் கொண்டிருந்தவை. பயணங்களின் போது யாராவது அவர்செல்லுமிடத்திற்கான பயணச்சீட்டை அளிப்பார்கள்.
 
ஸ்வாமிஜிஒரு முறை மஹாராஷ்ட்ரத்திலுள்ள பெண்கள் பர்தா முறையைப் பின்பற்றுவதில்லை என்பதில்மிகுந்த நம்பிக்கையைத் தெரிவித்தார். உயர் வகுப்பைச் சார்ந்த ஒரு சில மாதர்கள் முன்னாளைய புத்த பிட்சுக்கள் போலதங்கள் வாழ்க்கையை ஆன்மிகம், மதம்ஆகியனவற்றைப் பரப்புவதில் கழித்திருக்க வாய்ப்புண்டு. என்னைப் போலவே அவரும் ஸ்ரீமத் பகவத் கீதை யாருக்கும் துறவை போதிக்கவில்லைஎன்றும் மாறாக செயலில் பற்றற்று, அதனால்விளையும் பலனில் ஆசையற்று செயல் மட்டுமே புரியுமாறு உந்துவதாய்த் தான் நம்பினார்.
 
நான் அப்போது ஹீராபாக்கிலுள்ள டெக்கான் க்ளப்பில் உறுப்பினராய் இருந்தேன். அவர்களுடைய  வழக்கமான வாராந்திரசந்திப்புகள் ஒன்றில் ஸ்வாமிஜியும் என்னுடன் கலந்து கொண்டார். அன்றைய மாலைப் பொழுதில் அமரர் காசிநாத் கோவிந்த் நாத் தத்துவம் பற்றி ஒருசிறந்த உரையாற்றினார். யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஸ்வாமிஜி எழுந்து அவர் பேசியதின் மற்றைய ஓர் பரிமாணத்தை வெகுதெளிவாகவும் மணிப் பிரவாள ஆங்கிலத்திலும் எடுத்துரைத்தார். அங்கிருந்த அனைவரும் ஸ்வாமிஜியின் ஆற்றலில் வெகுவாய் கவரப்பட்டனர். அவர் சீக்கிரமே பின் பூனாவைவிட்டுச் சென்று விட்டார்.
 
இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குப் பின் உலக சமய மாநாட்டிலும் பின்இங்கிலாந்து, அமெரிக்காவிலும் அதி மகத்தான வெற்றி பெற்றுஸ்வாமி விவேகானந்தர் தாய்நாடு திரும்பினார். ஒரு சிலசெய்தித்தாள்களில் அவரைக் கண்டு “இவர் என்னுடன்பூனாவில் தங்கிய அதே ஸ்வாமி தானோ?” என்று எண்ணிஅதை அவரிடமே கேட்டும் கல்கத்தா செல்லும் சமயம் பூனாவிற்கும் வருகை தருமாறும்வேண்டிக் கடிதமொன்று எழுதினேன். அதற்கு உணர்ச்சி பூர்வமான பதிலொன்றைஎழுதிய அவர் அந்த சன்யாசி தாமே என்றும் தற்போது பூனாவிற்கு வருகை தர இயலாமைக்குவருத்தமும் தெரிவித்திருந்தார். அந்தக்கடிதத்தைக் காணவில்லை. அது  கேசரி ப்ராசிக்யூஷனிற்குப் பிறகு (1897)  மற்றைய பொது மற்றும் தனிப்பட்ட பலவற்றுடன் அழிந்து போயிருக்கக் கூடும்.
 
இதற்குப்பிறகு ஒரு முறை கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்குபெறச் சென்றிருந்தசமயத்தில் சில நண்பர்களுடன் ராமகிருஷ்ண மிஷனின் பேலூர் மடத்திற்குச்சென்றிருந்தேன். எங்களை ஸ்வாமிஜிமிகுந்த வாஞ்சையுடன் வரவேற்றார். நாங்கள்தேநீர் அருந்தினோம். பேசிக்கொண்டிருக்கையில்ஸ்வாமிஜி நகைச்சுவையாக என்னை துறவறம் மேற்கொண்டு தன்னுடைய பணிகளை பெங்காலில்தொடருமாறும் தான் அதை மஹாராஷ்ட்ரத்தில் தொடருவாரென்றும் கூறி…”யாருக்கும் வெளி மாநிலங்களில்தங்களுக்குக் கிடைக்கும் செல்வாக்குத் தன் சொந்த மாநிலத்தில் கிடைப்பதில்லைஎன்றார்
 
~ நன்றி, வேதாந்த கேசரி, ஜனவரி 1934
From TheReminiscences of Swami Vivekananda
தமிழாக்கம் –  GnanaBoomi.com

லோகம்மாள்

சாதுக்களைக் கண்டு அவர்தம் வழிகாட்டலின் பேரில் சம்சாரக் கடலைக் கடக்கப் பேராவல் பூண்ட லோகம்மாள் இளவயதிலேயே விதவையானவர். தவத்தில் சிறந்த தன் மாமன் ஒருவரிடம் பஞ்சாக்ஷர மஹா மந்திர உபதேசம் பெற்று இரவும் பகலும் அதை ஆயிரக்கணக்கான முறை ஜபித்து அம்மந்திர பலத்தாலேயே தன் உடல் முழுதும் எரிவது போன்ற வெப்ப உணர்வு தோன்றும் அவருக்கு.

பகவான் ரமணரின் புகைப்படத்தை லோகம்மா திருமங்கலதிதிலுள்ள ஒரு உறவினர் வீட்டில் கண்டார். இந்தப் பெண்மணி திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுள்ளவர். ஆனால் லோகம்மாளின் உறவினர் அவரை இவ்வம்மையாருடன் செல்ல அனுமதிக்கவில்லை.

தென்காசிக்கு ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கையில் யாரோ ஸ்வாமி சமாதியானதைச் சொல்லக் கேட்டு லோகம்மா பீறிடும் ஒரு கேவலை வெளியிட்டுப் பின் அமைதியாகி விட்டார். பின் பகவான் தன் முன் கையில் கைத்தடியும் கமண்டலமும் ஏந்திக் காட்சி தந்ததைக் கூறினார். அந்தக் காட்சி எவ்வளவு தத்ரூபமாய், நிஜம் போல நிகழ்ந்ததென்றால் லோகம்மா சுவாமி சமாதியானார் என்ற சேதி சொன்னவரைப் பார்த்து “பகவான் ரமணர் நம் முன்னால் நின்று கொண்டிருக்கையில் எவ்வாறய்யா நீ கூறலாம் இப்படியெல்லாம்?” என்று கடிந்து கொண்டார். இந்தக் குழப்பம் பின்னாளில் தீர்ந்தது. சமாதியானது சேஷாத்ரி ஸ்வாமிகள், பகவான் ரமணரில்லை என்பது. இருப்பினும் லோகம்மாவிற்கு பகவானை நேரடியாக தரிசிக்கும் சமயம் அப்போது வாய்த்திருக்கவில்லை.

பின்னாளில் தன் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்ட சமயத்தில் லோகம்மாள் ராமேஸ்வரத்திற்குப் பயணமானார். தன் கைம்பெண் வாழ்க்கையை இனித் தாள முடியாதென்று கடலில் பாய்ந்து உயிர்விடத் தீர்மானித்து, தன் முடிவை செயலாற்ற எத்தனிக்கையில் அவருக்கு “திருப்பதியிலிருந்து வரும் யாத்திரிகர்களுடன் திருவண்ணாமலை செல்ல வேண்டுமென்றும் அவர்தம் கனவு நனவாகும்” என்றும் ஒரு குரல் கேட்டது.

வெகு சீக்கிரத்திலேயே லோகம்மாள் பகவானின் பாதங்களையடைந்தார். அப்போது பகவான் அவர்தம் அருட்பார்வையால் லோகம்மாளை சுமார் பத்து நிமிடங்களுக்கு இடைவிடாமல் நோக்கினார். லோகம்மாள் பலமுறை தன் விழிகளை பலவந்தமாய் மூடிக் கொள்ளுமளவிற்கு ஒரு ஒளி அவர் கண்களில் தெரிந்தது. என் கண்கள் முழுதும் கண்ணீரால் நிரம்ப, நான் பகவானை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.” எதற்காக இத்துணை நாளும் ஏங்கினாரோ அதை ஒரு சில நொடிகளில் அருளிவிட்டார் பகவான். லோகம்மாளின் வாழ்க்கை அத்தோடு முழுவதுமாய் மாறிவிட்டது.

(பகவானின் கண்களை உற்று நோக்குங்கள். அதிலுண்டாகும் மாற்றம் கண்டு அதிசயித்துப் போவீர்கள்.)

இச்சமயங்களில் லோகம்மாள் ஆஸ்ரமத்து சமையலறையில் தங்கி சேவை செய்து வந்தார். வீடு திரும்பும் வேளையில் பகவான் அவருக்கு “உபதேச மஞ்சரி”  தந்தருளினார். பின்னாளில் லோகம்மாள் ஆஸ்ரமம் வந்து மாதக்கணக்கில் தங்குவார், அச்சமயங்களிலெல்லாம் பகவான் அவருக்கு ஆன்மிக வழிகாட்டியாயிருந்தார்.

~ நன்றி – ரமணாஸ்ரமம் | சரணாகதி | The Mountain Path

சந்த்யா பாஷை!

சந்த்யா” என்பது இரண்டு பொழுதுகள் சந்திக்கின்ற சந்திப்பொழுதை குறிக்கின்றது. சந்தி காலத்தில் இரண்டு பொழுதுகள் கலந்து மயங்கும்போது, இந்த பொழுது எந்த பொழுது என்று தெரியாதபடி இரண்டு பொழுதுகளாகவும் கொள்ள இடமளிப்பது போல சந்த்யா பாஷை என்பது இரண்டு பொருள் உடையதாய் எந்த பொருள் உண்மை பொருள் என்று தெரியாமல் மயங்கிஅமைவதால் இந்த பெயர் பெற்றது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசும்மொழி அது. இது இயல்பான மேல் பொருளும் ஒரு மறை முகமான மெய் உணர்வு பொருளும் கொண்டது. சந்த்யா மொழி என்பது வெளிப்படையாக சொல்லமுடியாத ஆனால் சொல்லியே ஆகவேண்டிய சில செய்திகளை சொல்வதற்காக திட்டமிட்டே உருவாக்கப்பட்ட மொழி. அது ஒருவகை மொழி நுட்பம். சித்தர்கள் தங்கள் பாடல்களில் இந்த முறையை தான் கையாண்டனர்.

காரணம் என்ன?

 1. தீட்சை பெறாதவர்கள் மேலோட்ட பொருளோடு நிறைவடைந்து நின்றுவிடுமாறு செய்தல்.
 2. எளிய மொழியில் எழுதுவதன் மூலம் பொது மக்கள் நாவில் அதை வழங்குமாறு செய்தல். அதனால் தலை முறை வழியாக சிதைவின்றி சேர்வதற்கு வழி கோலுதல்.
 3. பாடலின் செய்தி சாதி, மத, இன, பால் வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சென்றடைய வகை செய்தல்.
 4. வைதீகர்கள் பாடல்களை சிதைத்து விடாதபடி, அதற்குள் உருப்படியான பொருள் ஏதுமில்லாதது போல் தோற்றம் காட்டி அவர்களை ஏமாற்றுதல்.
 5. மனதின் மிக உயர்ந்த அனுபவங்களை இயல்பான மொழியில் வெளிப்படுத்த முடியாது என்ற போதாமை உணர்வு.
 6. முக்கியமான சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ள பொருள் இல்லா சொல் ஒன்றை உருவாக்கி கொள்வது. உதாரணமாக “இருகுரங்குகை” என்றால் “முசுமுசுக்கை” என்ற மூலிகை.
 7. போலியான வைதீக சமயத்தை அதனுடைய மொழித் தூய்மையை கேலி செய்யும் விதமாகப் பயன்படுத்தி அதனை தொந்தரவு செய்வது.
 8. யோகியை பயிற்றுவிக்கு முகமாக அவனை பல புதிர்களுக்கும் முரண்களுக்கும் உள்ளாக்கி அவனைத் தயார் படுத்துவது.


உதாரணம்:-

தண்டு இல்லா மரம் எது? சிறகில்லாத கிளி எது? கரை இல்லா அணை எது? சாவாமலே செத்தவன் யார்?

காற்றே கிளை இல்லாத மரம். மனமே சிறகில்லாத கிளி. பொறுமையே கரைல்லாத அணை. உறக்கமே சாவாமல் வருகிற சாவு.

பசு கன்றின் மடியில் பால் குடிக்கிறது.
யோகிகள் உண்ணும் பசு இறைச்சி – சகஸ்ராரத்தில் ஊரும் அமுதம்

வெள்ளி யுருகிப் பொன் வழி ஓடமே
கள்ள தட்டனர் கரியிட்டு மூட்டினர்
கொள்ளி பரியக் குழல் வழியே சென்று
வள்ளி உண்ணாவில் அடக்கி வைத்தாரே! (திருமந்திரம்).

அஸ்தி கரைத்தல் – சகஸ்ராரத்தில்  சிவனுடன் ஒன்றி கலந்து தன்அடயாளங்களை இழத்தல்.

வழுதலை வித்திட பாகன் முளைத்தது,
புழுதியை தோண்டினேன் பூசணிமுளைத்தது,
தொழுது கொண்டாடினர் தோட்ட குடிகள்,
முழுதும் பழுத்ததுவாழை கனியே

குண்டலினி யோகா பயிற்சியை மேற்கொண்டபோது வைராக்யம் கிடைத்தது, ஆன்ம தத்துவங்களை பரிசோதித்தபோது சிவத்துவத்தை கண்டேன், சிவத்துவத்தை நான் கண்டறிந்து கொண்ட பின்னர் புலனுணர்வுகள் என்னை விட்டு அகன்றன, சிவனுபாவம் விளைந்தது.

காசியின் மகிமை!

காசி வாசம் எல்லாப் பாவங்களையும் நாசம் செய்துவிடும். காசியில் வாசம் செய்பவரை தர்மமே காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவன் காசி என்கிற வாராணாசியை விட்டு வேறு எங்காவது சென்றால் – அது கிடைத்தற்கரிய அபூர்வ நிதியைத் தள்ளிவிட்டு, பிச்சை எடுத்துப் பணம் சேர்க்கச் செல்வது போன்றது. உலகில் பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், வீடு வாசல், செல்வம் ஆகியவை எல்லாம் ஒவ்வொரு ஜன்மத்திலும் கிடைக்கும். ஆனால் காசி வாசம் எப்போதும் கிடைக்காது. பாக்கியவான்கள் மூன்று உலகத்தையம் உய்விக்கச் செய்யும் திறமை வாய்ந்த காசி வாசம் பெறுவது, மூன்று உலக ஐஸ்வர்யங்களையும் பெறுவதை விட மேலானது. காசியிலே ஒருவன் இருந்தால் ஆத்மஞானத்தால் வரும் பிரம்ம தேஜஸ் அவனுக்குக் கிட்டும். காசியை அடைந்து அதனால் ஏற்படும் பிரகாசத்தின் மலர்ச்சிக்கு முன்பு, மற்ற எல்லாப் பிராகாசங்களும் மின்மினிப் பூச்சியின் பிரகாசம் போன்று ஆகிவிடுகிறது என காசிக் கண்டம் என்ற சம்ஸ்கிருத நூல் கூறுகிறது.  காசியில் வாழ்கிறவர்களைத் தொட்டாலும் போதும். பிறவித் துன்பம் தொலைந்து போகும் என்று அதிவீரராமபாண்டியர் இயற்றிய காசிக் கண்டம் கூறுகிறது. இதோ அவரது பாடல். மணிமேகலை காப்பியம், வாரணாசி ஒர் மறையோம்பாளன் என்று இயம்புகிறது.

காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும், காசியை பேசும் நாவே நாவாகும். காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும், காசியை இனிது காணும் கண்களே கண்களாகும் என காசிக்கண்டம் கூறுகிறது. குமரகுருபர சுவாமிகள் தாம் இயற்றிய காசிக் கலம்பகம் என்ற நூலில், காசி விஸ்வநாதரைக் தொழாதார் பிறப்பார் என்கிறார். மேலும் அவர் ஆனந்தம் தரும் அன்பூரணியுடன் மகாமயானத்தில், ஆனந்தமாக ஆடும் சிவபெருமான் அழகில் ஈடுப்டடுத் திளைத்து ஆடுங்கள். இல்லாவிட்டால் பிறவியில் அகப்பட்டு இளைத்து ஆட வேண்டும் என்றும் எச்சரிக்கிறார். மேலும் காசிப்பதியை சிவபெருமானின் படை வீடு என்றும் குமரகுருபர சுவாமிகள் பாடினார். எல்லாப் புண்ணியத் தலங்களுக்குள் காசியே மணிமுடி போல் தலைசிறந்து விளங்குகிறது. கந்தபுராணம் காசியில் இறக்கும் ஜீவர்களுக்கு சிவபெருமான் தாரக மந்திரம் உபதேசித்து முக்தி வழங்குகிறார் என்று கூறுகிறது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்வாமி விவேகானந்தர் கண்ட ஆன்மிகக் காட்சி

நான் என் மனதை எதிலும் செலுத்தாமல் நிலையாக நிறுத்தி வைத்திருக்கும் போதெல்லாம் ஆனந்தமயமான அன்பு அலையாக பாய்வதை உணர்ந்திருக்கிறேன். அதன் விளைவாக  தியானம் செய்து முடித்து வெகு நேரம் ஆன பின்னும் ஒரு வித மயக்கத்தில் இருப்பது போலவே தோன்றும். இதனால் என் இருக்கையை விட்டு உடனே எழுந்து செல்லத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருப்பேன். இப்படி ஒரு நாள் தியானத்தில் இருக்கையில் ஓர் அதியற்புதமான தோற்றத்துடன் நானிருந்த அறையை வெளிச்சத்தில் மூழ்கடிப்பதான ஒளியுடன் ஒரு துறவி – எங்கிருந்து வந்தாரோ தெரியாது –  என்னிலிருந்து சிறிது தொலைவில் தோன்றினார். 
காவி வஸ்திரமும் கமண்டலமும் தரித்திருந்த அவருடைய முகத்தில் அப்படி ஒரு சாந்தமும் மனதை உள்நோக்கிய தெய்வீகக் களையும் உலக பேதங்களில்லாத வகையிலும் கூடிய தேஜஸ் ஒளிர்ந்தது. அந்த முகம் என்னை வசீகரிப்பதாயும் ஆகர்ஷிப்பதாயும் தோன்றியது. அவர் என்னை கூர்ந்து நோக்கிய வண்ணம் ஏதோ சொல்ல விரும்புபவர் போல மெள்ள என்னை நோக்கி அடியெடுத்து வைத்து வந்தார். ஆனால் நான் ஒரு சொல்லவொண்ணா அச்சத்தில் பீடிக்கப் பட்டு, இருக்கையை விட்டு எழுந்து வேகமாய்க் கதவைத் திறந்து வெளியேறி விட்டேன். ஆனால் மறுகணமே “ஏன் இந்த முட்டாள் தனமான பயம்?” என்று கேட்டுக்கொண்டு தைரியமடைந்து அந்தத் துறவி என்னதான் சொல்ல வருகிறார் என்று கேட்பதற்காக மறுபடி அறைக்குள் பிரவேசித்தேன். ஓ! அவரைக் காணவில்லை. நான் அங்கேயே வெகுநேரம் பின்னர் காத்திருந்தும் பயனில்லை, அவர் வரவில்லை. “அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்காமல் ஓடியது எத்தகைய முட்டாள்தனம்” என்று நான் என்னையே கடிந்து கொண்டேன். எத்தனை எத்தனை துறவிகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் அந்த முகம் போல ஓர் அசாதாராணமான ஒன்றைக் கண்டதேயில்லை. அப்படி என் மனதில் அழியாத வண்ணம் பொதிந்திருக்கிறது அந்த முகம். ஒருவேளை இது பிரமையாக இருந்திருக்கலாம். ஆனால் நான் புத்த பெருமானைக் காணும் பெரும் பேற்றைத் தான் அன்றைய தினம் அடைந்தேன் என்று அடிக்கடி நான் நினைத்துக் கொள்வேன். 


ரமணரின் கருணைக்கு எல்லை ஏது!

ஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும்! இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று!

இதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே… என்று கலங்கினார்; கண்ணீர் விட்டார்! அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா? அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே? கொடியில் இருந்த துண்டை எடுக்கும்போது கூட்டுக்கு ஒன்றும் நேராமல் தவிர்த்திருக்கலாமே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

‘எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டோம்…’ என்று வருந்தியபடி இருந்த ரமணர், விரிசலுடன் இருந்த முட்டையை எடுத்து, தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். அந்த முட்டையையே கருணையுடன் பார்த்தார். ‘பாவம் இதன் தாய்! இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும்? அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும்? இந்த விரிசல் சேருமா? சேர்ந்தால் நன்றாக இருக்குமே…’ – மனதுள் நினைத்துக் கொண்டார்.

கருணை மனமும் தாய்மை குணமும் கொண்டு முட்டையிடம் வாஞ்சை காட்டிய ரமணருக்கு, அப்போது உதித்தது யோசனை ஒன்று… விறுவிறுவென துணி ஒன்றை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தார்; அந்த விரிசல் விழுந்த முட்டையைச் சுற்றிலும் ஈரத்துணியைக் கட்டினார்; அப்படியே பூப்போல மெள்ள எடுத்து வந்து கூட்டுக்குள்ளேயே வைத்தார். அவ்வளவுதான்! அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர்! குருவிக் கூட்டுக்கு அருகிலேயே அமர்ந்த ரமண மகரிஷி, மனதுள் தோன்றும் போதெல்லாம் எழுந்து, கூட்டுக்கு அருகே போவதும் அந்த துணி கட்டிய முட்டையை எடுத்து கருணை வழிய பார்ப்பதுமாகவே இருந்தார். உள்ளங்கையில் முட்டையை ஏந்தியிருக்கும் வேளையில், அவருடைய மனம், ‘இந்த விரிசல் ஒட்டிக்கொள்ள வேண்டும்; முட்டையானது உயிராக மலர வேண்டும்’ என்றே சிந்தித்தது.

ஞான குருவின் எண்ண அலைகள், அந்த முட்டை விரிசலிலேயே இரண்டறக் கலந்திருந்தது. ஏதோ மிகப் பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டது போல் கூனிக் குறுகியவர், அந்தத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக குருவிக் கூட்டுக்கு அருகில் இருந்ததைக் கண்ட அன்பர்கள், ‘நம்முடைய மகான் செய்யும் இந்தக் காரியம் கிட்டத்தட்ட தவத்துக்கு இணையானதுதான்’ என உணர்ந்து சிலிர்த்தனர்.

அடுத்தடுத்த நாளும் இது தொடர்ந்தது. துணியை தண்ணீரில் நனைப்பதும், அந்த முட்டையில் கட்டி வைப்பதும், அருகில் இருந்தபடியே அடிக்கடி வாஞ்சையுடன் பார்த்து வருவதுமாக இருந்தார் ஸ்ரீரமணர்! ஏழாம் நாள்… துணியை நீரில் நனைத்து கட்டுவதற்காக, முட்டையை எடுத்தவர் அப்படியே வியந்து நின்றார். அவர் முகம் முழுவதும் நிம்மதி; ஆம்… அந்த விரிசலைக் காணோம்!

அன்பர்களை அழைத்த ரமணர் சந்தோஷத்துடன், ”இங்கே பார்த்தீர்களா? முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும்? இனி ஒரு குறையுமில்லை. நல்லவேளை… மிகப் பெரிய பாவத்துக்கு ஆளாக இருந்த என்னை, இறைவன் காப்பாற்றி விட்டான்” என்று கூறி சின்னக் குழந்தை போல் பரவசமானார் ரமணர்.

சில நாட்கள் கழிந்த நிலையில், மூங்கில் கொடியின் ஓரத்தில் இருந்த குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த ரமண மகரிஷியின் மனமெல்லாம் நிறைந்தது. அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்து, உயிராகக் காட்சி தந்தது. குருவிக் குஞ்சை அப்படியே எடுத்து உள்ளங்கையில் ஏந்திக் கொண்டார் ரமணர்; அதன் உடலை மெள்ள வருடிக் கொடுத்தார்.

ஆஸ்ரமத்து பணியாளர்கள் மற்றும் அன்பர் பெருமக்களை அழைத்தவர், ”பார்த்தீர்களா குழந்தையை! எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று எல்லோரிடமும் குருவிக் குஞ்சைக் காட்டி குதூகலித்தார். தாய்க் குருவி, முட்டையை அடைகாத்ததோ இல்லையோ… அந்த தாய்க் குருவியின் ஸ்தானத்தில் இருந்தபடி முட்டையை அடைகாத்தார் ரமணர்.

‘நான்’ எனும் கர்வத்தையும் சிந்தனையையும் ஒழித்து, பார்க்கும் உயிரில் எல்லாம் இறைவனைக் கண்ட ரமணரின் கருணைக்கு எல்லை ஏது?

முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்!


மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது.

பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய் விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லாமையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடியும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும்.

அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்கமாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது. 

 

ஆன்மீகப்படி ஏற அசைவம் தவிர்ப்பீர்!

சமீபத்தில் ஒரு பெரியவருடன் உரையாட நேர்ந்தது! அதில் ஒரு புதிய தகவல் கிடைத்தது.  உண்மை என்று என் மனம் ஒத்துக்கொண்டதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.  தேவை படுபவர்கள், இது உண்மை என்று உணர்ந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.  நிர்பந்தம் இல்லை.

“ஆன்மீகமும், அதில் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளும் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கலாம். இல்லையா?” அவர்.

“ஆம்” – இது நான்!

“அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என பெரியவர்களும், சாப்பிடுவதில் தவறில்லை ஆனால் பயிற்ச்சியில் முழு கவனம் வேண்டும் என்று இந்தக்கால ஆசிரியர்களும் சொல்லுவதை கேட்டிருக்கலாம்”
 
“ஆமாம்”

“பெரியவர்கள், தாங்கள் வார்த்தை மதிக்கப்படும் என்று, விரிவாக சொல்லவில்லை.  ஆசிரியர்கள் தாங்கள் நிலையை பாதுகாத்து உயர்த்திக்கொள்ள உண்மையை உரைப்பதில்லை.”

“பெரியவர்கள் நிலை ஏன் அப்படி? ஆசிரியர் நிலை ஏன் அப்படி?”

“வார்த்தையை வீணடிக்க விரும்பாததாக இருக்கலாம்.  அந்த காலத்தில், பெரியவர்களின் தவ மகிமையை உணர்ந்தவர்கள், ஏன் என்று கேட்காமல் அவர்கள் சொன்னதை அதே போல நம்பிக்கையுடன் தொடர்ந்து கரை ஏறினர்.  இது கலிகாலம்! எதையும் ஆராய்ந்து பார்த்து, சொல்வது உண்மை என்று நம்பினால் மட்டும் தொடர்ந்து பார்ப்போமே என்று மனித மனம் விரும்பும் காலம்.  பெரியவர்கள் கேட்பவர்கள் மனதுக்கு ஏற்ப உண்மையை உரைக்க விரும்பாதவர்கள்.  உண்மையை அதாகவே உரைப்பவர்கள்.  எதிர்பார்ப்பில்லதவர்கள்.  எல்லாம் இறைவன் செயல் என்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டும் செய்பவர்கள். இந்தக்கால ஆசிரியர்களுக்கு தன்னிடம் வருபவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்கிற எண்ணம் மட்டும் தான்.  கேட்டு செல்பவர் கூட தனக்கு எளிதாக எப்படி உண்மை புரிகிறது என்று தான் பார்க்கிறார்களே தவிர, உண்மையை அதன் மூலத்தில் சென்று அதாகவே உணர விருப்பமில்லாதவர்கள்.  இது தான் பிரச்சினை.  கேட்பவன், கிடைப்பதை ஏற்றுக்கொண்டால், ஆசிரியன் ஏன் அவனை திருப்திப்படுத்த நிற்க வேண்டும்? சுருக்கமாக சொல்லப்போனால் ஆசிரியன், கேட்பவன் இருவர் மனநிலையும் உண்மையை விட்டு வெகு தூரத்தில் விலகி இருக்கிறது.”

“சரி விஷயத்துக்கு வருவோம்.  அசைவ உணவு ஒரு போதும் ஆன்மீகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை,.  அது தான் உண்மை.  உன்னை ஒருவன் இப்பொழுது தாக்க வந்தால், என்ன செய்வாய்?”

“தற்காப்புக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்!”

“சரி! தற்காப்புக்கு வழிகளை தேடும் போது, உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது?”

“உடலில் பல சுரப்பிகள் சுரந்து, உடலை தாக்குதலை தாங்கும் விதமாக தயார்படுத்துகிறது!”

“அந்த சுரந்த அமிலங்கள் உன் உடலுக்கு சேரும்விதமாகவும், எதிராளியின் தாக்குதலுக்கு தடுப்பாகவும் இருக்கும்.  இல்லையா?”

“உண்மை”

“இன்னொரு ஜீவனை இப்படி துன்புறுத்த நினைக்கும் போது, அங்கேயும் இந்த மாதிரி தானே நடக்கும்?”

“ஆமாம்”

“கொல்லப்பட்ட அந்த உடலில் அந்த அமிலங்கள் தங்கி இருக்கும் தானே.”

“ஆமாம்”

“அதை சாப்பிடுபவனுக்கு அந்த அமிலங்கள் உதவி செய்யுமா அல்லது பகையாகுமா?”

“பகையாகி வியாதியாக மாறும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்!”

“எந்த ஜீவனும், உயிருக்கு பங்கம் வந்தால் விட்டு கொடுக்காமல் போராடும்.  வெற்றி தோல்வி என்பது அந்தந்த சூழ்நிலையை பொறுத்தது.  ஜீவன் உடலை விட்டு ஒரு போராட்டம் நடத்திவிட்டு தான் செல்கிறது.  அந்த உடலை புசிப்பவன் மன நிலை மாறும்.  விட்டு கொடுக்கும் மனநிலை இல்லாமலாகிவிடும்.  ஆன்மீகத்தில் முதல் பாடம் விட்டுக்கொடுப்பது.  அசைவம் புசிப்பவன் மனம் ஒரு போதும் விட்டு கொடுக்க முன் வருவதில்லை.  விட்டு கொடுக்கிறேன் என்று நினைப்பவர்கள் வார்த்தை அளவில் தான் சொல்கிறார்களே தவிர, மனதுக்குள் எப்போதும் போராட்டம் தான்.  விட்டு கொடுத்தால் தான் படி ஏற முடியும். அசைவம் அந்த தகுதியை இழக்க வைக்கிறது.  இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.”

“உண்மை.  உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன்!  ஒரு சந்தேகம்! விளக்கம் தேவை!”

“என்ன?”

“பசுவின் ரத்தத்திலிருந்து உருவாகும் பால் அசைவம் தானே”

“நல்ல கேள்வி.  சரியாக புரிந்து கொள்ளுங்கள்!  ஒரு பொருளை நீங்களாக கொடுப்பதற்கும், நானாக உங்கள் எதிர்ப்பை மீறி எடுத்துக்கொள்வதற்கும் வித்யாசம் உண்டு தானே!  அதில் இருக்கும் தாத்பர்யம் தான் ஒரு பொருளின் தன்மையை உருவாக்குகிறது.  எப்படி ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலை கனிவோடு தருகிறாளோ அது போல தான் பசு கனிவினால் தருகிற பால் சைவம் தான்.”

“மரம், செடி, கொடிகளுக்கு கூட உயிர் உண்டு இல்லையா? அப்படியானால் நாம் உண்ணும் தான்யங்கள் ஒரு உயிரை அழித்து எடுப்பதாகத்தானே ஆகும்?”

“மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு.  ஆனால் அந்தக்கரணம் என்கிற நிலை கிடையாது.  அந்தக்கரணம் இருந்தால் தான் சலனம் உண்டு, உணர்வு உண்டு, இடம் பெயர முடியும்.  அந்தக்கரணம் இல்லாத நிலையில், அவை பிற உயிர்களின் வளர்ச்சிக்கு மட்டும் தான்.  அவைகளை கூட மதிப்பதற்க்காகத்தான், பெரியவர்கள், அவை கனிந்து உதிர்க்கும் பழம்/விளைவுகளை பூமியிலிருந்து எடுத்து உண்டு வாழ்ந்தனர்.”

புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.  எனக்கு கிடைத்த தகவலை தெரிவிப்பது மட்டும் தான் இந்த முயற்சி.

பார்வையாளனாய் இரு!


இது ஒரு மென்மையான, தெளிவான உண்மை. புரிந்துகொள்ளுங்கள்.  “இறைவன் நம்மை எல்லாம் ஏமாற்றுகிறான்”.  எப்படி? 

ஆதற்கு முன் ஒரு சிந்தனையை பார்ப்போம்! இறைவன் தன்னை சிதறடித்து இந்த உலகத்தையும் அண்டங்களையும், விண் வெளியையும் படைத்துள்ளான்.  ஏன் அப்படி செய்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.  அப்படி செய்த இறைவன் இப்போது ஒரு சிந்தனையில் இருக்கிறான்! அது என்ன? மறுபடியும் அனைத்தையும் ஒன்று சேர்த்து பழைய உருவுக்கு திரும்பவா இல்லை அனைத்தையும் கரைத்து வெற்றிடத்தில் மறைந்திடலமா? என்பதே.  எப்படிப்பட்ட வித்தியாசமான சிந்தனை இது என்று பாருங்கள்? 

சரி!  இதின் உட்கருத்தை பார்ப்போம்!

 • தன்னை சிதற அடித்தபோது, சிதறிய சின்ன துகள் நாம் .  இறைவனின் அங்கமாக இருந்தோம், ஆதலால் நாமும் இறைவன் தான். துகளாக சுற்றி திரிந்தாலும் இறைவன் அம்சத்துடன் தான் உள்ளோம்.
 • இறைவன் மறுபடியும் ஒன்று சேர நினைத்தால் இறைவனுடன் ஒன்றி கலந்து இறையாகவே மாறிவிடுவோம்.
 • இறைவன், வெட்டவெளியில் கரைந்துபோக நினைத்தால் அப்பொழுதும் இறையுடன் கலந்து அவன் நினைத்த உருவாக மாறிவிடுவோம்.
 • எந்த விதமான தீர்மானம் இறை எடுத்தாலும், நாம் இறைவனுடன் தான் கலக்கபோகிறோம்.  அது உண்மை!
சரி!  இனி விஷயத்துக்கு வருவோம்.  சிதறிய துகள்களுக்கு நுண் அறிவை கொடுத்து, அது  வரையில் காலத்தை கடக்க நமக்கு வழங்கப்பட்டதே வாழ்க்கை.  கர்மா, சொந்தம், பந்தம், அதிசயம், ஆச்சர்யம் போன்ற “கொக்கிகளை” இட்டு நம்மை கட்டிப்போட்டு நம் கவனத்தை அவனிடமிருந்து திசை திருப்புகிறான்.  அவன் இருப்பை உணர்ந்து, மேல் சொன்னவை அனைத்தும் தூசு என்று தீர்மானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை வழங்கி அவன் அருகில் இடம் கொடுத்துதான் ஆகவேண்டும்.  அத்தனை பேருக்கும் இடம் கொடுத்துவிட்டால் அவன் தீர்மானித்த நாடகத்தை யார் நடத்துவது?  இதை வெற்றிகரமாக நடத்திட வேண்டித்தான் நமக்கு ஆசைகளை கொடுத்து, வாசனைகளை உ