தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிமெய்வருத்தக் கூலி தரும்.
இது வள்ளுவர் வாக்கு! ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறையுள், உடல்நலம் ஆகிய நான்கும் ஆகும். இவற்றை தருவதற்கு இறைவனால் ஆகாதா? நிச்சயமாக தர முடியும்.
முக்தி அல்லது மோட்சம்! ஒரு மனிதனுக்கு இதை மட்டுமே தெய்வங்களால் கொடுக்க இயலாது. இதை அடைவதற்கு மனிதன் தனது மெய்யை வருத்த வேண்டும். அவ்வாறு வருத்தினால், அதற்கு தக்க கூலி கிடைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறு மெய்யை வருதுவதற்கே தவம் அல்லது த்யானம் என்று பெயர். அதை பழகுவதற்கு குரு துணை அல்லது வழிநடத்தல் வேண்டி வரும்.
புண்ணாக்கு சித்தர் சொல்வதைக் கேட்ப்போம்.
காட்டில் இருந்தாலும் கனக தவம் செய்தாலும்காட்டும் குரு இல்லாமல்ஞானம் கண்டறியலாகாதே!
நல்ல ஆத்மாக்கள், சித்தர்கள், ஞானிகள் என்ன செய்தால் நமக்கு அருள்வார்கள்?
மிக எளிய பதில் – நேர்மை, வாக்கு சுத்தம், புலன் கட்டுப்பாடு, நம்பிக்கை நிறைந்த சரணாகதி, அவர்கள் காட்டும் வழியில் நடத்தல்!
முதலில் வாக்கு சுத்தத்தில் தொடங்குவோம்! அது என்ன? நம் வார்த்தையை நாமே மதித்தல். தலையே போவதாக இருந்தாலும் சொன்ன, சத்தியம் செய்து கொடுத்த வார்த்தையை மீறாமல் இருத்தல். இது எல்லாராலும் முடியும். வார்த்தையே வாழ்க்கை என நினைத்து நடக்கலாம். கண்டிப்பாக நல்லது நடக்கும். பெரியவர்கள் வருவார்கள், வந்து தான் ஆக வேண்டும்.