லோகம்மாள்

சாதுக்களைக் கண்டு அவர்தம் வழிகாட்டலின் பேரில் சம்சாரக் கடலைக் கடக்கப் பேராவல் பூண்ட லோகம்மாள் இளவயதிலேயே விதவையானவர். தவத்தில் சிறந்த தன் மாமன் ஒருவரிடம் பஞ்சாக்ஷர மஹா மந்திர உபதேசம் பெற்று இரவும் பகலும் அதை ஆயிரக்கணக்கான முறை ஜபித்து அம்மந்திர பலத்தாலேயே தன் உடல் முழுதும் எரிவது போன்ற வெப்ப உணர்வு தோன்றும் அவருக்கு. பகவான் ரமணரின் புகைப்படத்தை லோகம்மா திருமங்கலதிதிலுள்ள ஒரு உறவினர் வீட்டில் கண்டார். இந்தப் பெண்மணி திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுள்ளவர். […]

சந்த்யா பாஷை!

“சந்த்யா” என்பது இரண்டு பொழுதுகள் சந்திக்கின்ற சந்திப்பொழுதை குறிக்கின்றது. சந்தி காலத்தில் இரண்டு பொழுதுகள் கலந்து மயங்கும்போது, இந்த பொழுது எந்த பொழுது என்று தெரியாதபடி இரண்டு பொழுதுகளாகவும் கொள்ள இடமளிப்பது போல சந்த்யா பாஷை என்பது இரண்டு பொருள் உடையதாய் எந்த பொருள் உண்மை பொருள் என்று தெரியாமல் மயங்கிஅமைவதால் இந்த பெயர் பெற்றது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசும்மொழி அது. இது இயல்பான மேல் பொருளும் ஒரு மறை முகமான மெய் […]

காசியின் மகிமை!

காசி வாசம் எல்லாப் பாவங்களையும் நாசம் செய்துவிடும். காசியில் வாசம் செய்பவரை தர்மமே காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவன் காசி என்கிற வாராணாசியை விட்டு வேறு எங்காவது சென்றால் – அது கிடைத்தற்கரிய அபூர்வ நிதியைத் தள்ளிவிட்டு, பிச்சை எடுத்துப் பணம் சேர்க்கச் செல்வது போன்றது. உலகில் பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், வீடு வாசல், செல்வம் ஆகியவை எல்லாம் ஒவ்வொரு ஜன்மத்திலும் கிடைக்கும். ஆனால் காசி வாசம் எப்போதும் கிடைக்காது. பாக்கியவான்கள் மூன்று உலகத்தையம் உய்விக்கச் செய்யும் […]

கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்வாமி விவேகானந்தர் கண்ட ஆன்மிகக் காட்சி

நான் என் மனதை எதிலும் செலுத்தாமல் நிலையாக நிறுத்தி வைத்திருக்கும் போதெல்லாம் ஆனந்தமயமான அன்பு அலையாக பாய்வதை உணர்ந்திருக்கிறேன். அதன் விளைவாக  தியானம் செய்து முடித்து வெகு நேரம் ஆன பின்னும் ஒரு வித மயக்கத்தில் இருப்பது போலவே தோன்றும். இதனால் என் இருக்கையை விட்டு உடனே எழுந்து செல்லத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருப்பேன். இப்படி ஒரு நாள் தியானத்தில் இருக்கையில் ஓர் அதியற்புதமான தோற்றத்துடன் நானிருந்த அறையை வெளிச்சத்தில் மூழ்கடிப்பதான ஒளியுடன் ஒரு துறவி – […]

ரமணரின் கருணைக்கு எல்லை ஏது!

ஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும்! இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று! இதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் […]

முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்!

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்கு உதவுவதாகவுமிருக்கிறது. பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் […]

ஆன்மீகப்படி ஏற அசைவம் தவிர்ப்பீர்!

சமீபத்தில் ஒரு பெரியவருடன் உரையாட நேர்ந்தது! அதில் ஒரு புதிய தகவல் கிடைத்தது.  உண்மை என்று என் மனம் ஒத்துக்கொண்டதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.  தேவை படுபவர்கள், இது உண்மை என்று உணர்ந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.  நிர்பந்தம் இல்லை. “ஆன்மீகமும், அதில் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளும் நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கலாம். இல்லையா?” அவர். “ஆம்” – இது நான்! “அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என பெரியவர்களும், சாப்பிடுவதில் தவறில்லை ஆனால் பயிற்ச்சியில் […]

பார்வையாளனாய் இரு!

இது ஒரு மென்மையான, தெளிவான உண்மை. புரிந்துகொள்ளுங்கள்.  “இறைவன் நம்மை எல்லாம் ஏமாற்றுகிறான்”.  எப்படி?  ஆதற்கு முன் ஒரு சிந்தனையை பார்ப்போம்! இறைவன் தன்னை சிதறடித்து இந்த உலகத்தையும் அண்டங்களையும், விண் வெளியையும் படைத்துள்ளான்.  ஏன் அப்படி செய்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.  அப்படி செய்த இறைவன் இப்போது ஒரு சிந்தனையில் இருக்கிறான்! அது என்ன? மறுபடியும் அனைத்தையும் ஒன்று சேர்த்து பழைய உருவுக்கு திரும்பவா இல்லை அனைத்தையும் கரைத்து வெற்றிடத்தில் மறைந்திடலமா? என்பதே.  எப்படிப்பட்ட […]

மெய்வருத்தக் கூலி தரும்!

அனைவருக்கும் வணக்கம்! தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும். இது வள்ளுவர் வாக்கு!  ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறையுள், உடல்நலம் ஆகிய நான்கும் ஆகும். இவற்றை தருவதற்கு இறைவனால் ஆகாதா?  நிச்சயமாக தர முடியும். முக்தி அல்லது மோட்சம்!  ஒரு மனிதனுக்கு இதை மட்டுமே தெய்வங்களால் கொடுக்க இயலாது.  இதை அடைவதற்கு மனிதன் தனது மெய்யை வருத்த வேண்டும்.  அவ்வாறு வருத்தினால், அதற்கு தக்க கூலி கிடைக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.  இவ்வாறு மெய்யை […]