ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 10

10 – ஜஸ்டிஸ் என். சந்திரசேகர அய்யர் – மதராஸ் உயர்நீதிமன்றம்

மஹரிஷிக்கு நான் இருமுறை தரிசித்திருக்கிறேன், அவரின் ஆழமான ஒளிமிகுந்த, நம் ஆன்மாவுக்குள் ஊடுறுவிப் பார்க்கும் கண்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.  

அவர் நம்மீது தன் பார்வையை நிலைநிறுத்துகையில் கண்ணாடி போலத் தெரியும் கடிகாரத்தின் உள்பாகங்களை அவர் பார்ப்பது போலத் தோன்றும், அதே சமயம் அவரிடமிருந்து கருணையின் மெல்லிய சக்திவாய்ந்த கதிர்கள் ஒரே சீராக நம் மீது படருவதும் தெரியும்.

ஆன்மீக சக்தி மற்றும் ஞானத்தின் ஊற்றுக்கண் மஹரிஷி. அமைதியை படரச்செய்பவர். தன்னைக் காண வந்த அனைவரு தங்களுக்குள் இறைத்தன்மை மெல்லப் படருவதை உணர்ந்திருக்கின்றனர். இத்தகையவர்கள் தங்களுக்கேயான தனித்துவமான நிலையில் இருப்பவர்கள். மஹரிஷி வெகு குறைவாகவே பேசுவார். அப்படிப் பேசுகையில் வார்த்தைகள் மெல்ல, ஆனால் ஆழமான தாக்கத்தை உருவாக்கும் வகையில் வெளிவரும். ஆனால் அவருடைய மெளனம் அவர் பேச்சை விட மிக வலியது. அவர் திருமுடியில் தென்படும் மெல்ல அதிர்வுகள் உபநிஷத சாரம் போல – இதுவல்ல, இதுவல்ல.

முழுமையான பற்றின்மை, வலியோ மகிழ்ச்சியோ என்ற வித்தியாசமில்லாமை, தீர்க்கமான துறவு, நிஜமான சம பாவம், இவை இந்திய ரிஷிகளின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். ஸ்ரீ ரமண மஹரிஷி இத்தகைய மஹான்களின் வழி வந்தவராவார்.

மஹரிஷியின் திருமுன் இருப்பதே நம் ஆன்மாவின் எழுச்சிக்கான உன்னத அனுபவம். அவரிடமிருந்து எப்போதாவது வரும் சில சொற்கள் மிக அரிய வரப்பிரசாதம்; அவரின் கருணைக்குப் பாத்திரமாதல் என்பது பொக்கிஷம் கிடைத்தற்கு ஒப்பாகும்.

11 – எலெனோர் பாவுலின் நொயி

எலெனோர் பாவுலின் நொயி கலிஃபோர்னியாவிலிருந்து 1940களில் ஆஸ்ரமத்திற்கு இருமுறை வருகை தந்து சுமார் பத்து மாதங்கள் தங்கியிருந்தவர்.

ஹாலுக்குள் என்னை அழைத்துச் செல்கையில் என் மனமானது எதிர்பார்ப்புகளினால் விம்மி, துள்ளிக் கொண்டிருந்தது. மஹரிஷியின் இருப்பினால், அவருடைய புனிதத்தினால் அவ்விடமே மூழ்கியிருந்ததை உள் நுழைகையில் உணர்ந்தேன். அவர் திருமுன் தெய்வீகம் உயிர்த்து இருப்பதைக் காண முடிந்தது. அவர் புன்னகைத்த போது சுவர்க்கத்தின் கதவுகள் படீரெனத் திறந்தது போல இருந்தது. அப்படி ஒரு தெய்வீக ஒளியை படரச் செய்யும் விழிகளை நான் கண்டதேயில்லை – ஒளிரும் நட்சத்திரங்கள் போல! அன்பும் கனிவும் மிகுந்த அப்பார்வை ஒரு ஆசிர்வாதமாய் என் இதயத்திற்குள் நேராக சென்றது. நான் உடனடியாக அவர்பால் ஈர்க்கப்பட்டேன். அவர்முன் ஒருவருக்கு அப்படியொரு ஆழமான, உயர்வடையச் செய்யும் பாதிப்பு ஏற்படுகிறது, அவருடைய தெய்வீகத்தன்மையும் தெளிவாகத் தெரிகிறது.

அவருக்குப் பேச வேண்டிய அவசியமே இருக்கவில்லை, அன்பு கலந்த மெளனம், ஞான ஒளி வார்த்தையால் விவரிப்பதை விட வெகு வலிமையானது. இவர் போல மற்றொருவர் இப்பூமியில் தற்போது இருப்பதாய் நான் நினைக்கவில்லை. நான் மஹரிஷியின் கனிவான முகத்தையும் கருணையும் அன்பும் பொழியும் கண்களையும் கண்ட நொடி என் ஆன்மா கிளர்ந்தெழுந்தது. அவர் என் இதயத்தை நோக்கிய போது எனக்கு அவர் எவ்வளவு தேவை என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவரைக் காண வரும் அனைவரும் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். அவரிடமிருந்து கருணை அனைவருக்கும் படருகிறது.

நான் நன்கு தூங்கி ஆண்டுகளாகிறது, இதற்காக மருந்துகளும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது பற்றி மஹரிஷியிடம் நான் ப்ரஸ்தாபிக்கவில்லை. இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைய இரவும் அதற்குப் பிறகும் எந்த மருந்து உதவியும் இன்றி நான் மிக நன்றாக தூங்கினேன். மருந்துகளுக்கெல்லாம் மருந்தான இறைவனின் கருணை என்ற மருந்தை நான் அடைந்தேன். மறுநாள் காலையில் மிகவும் புத்துணர்ச்சியுடன் ஏதோ புதிதாக பிறந்தது போல எழுந்தேன். சற்றைக்கெல்லாம் மதிய நேரம் கதவருகில் நின்று கொண்டிருக்கும்போது மகரிஷி திருமலைக்கு செல்லும் வழியில் நின்று எனக்கு “நல்ல அமைதி கிடைத்ததா” என்று கேட்டார். அந்த அன்பும் கனிவும் ஏதோ நான் என் சொந்த இடத்திற்கே வந்தது போல தோன்றியது மகரிஷி என்னைப் பார்த்து புன்னகை புரிந்த போது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அமெரிக்காவை விட்டு வருகையில் நான் அமைதிக்காக மிகவும் ஏங்கினேன் ஆனால் இங்கே பகவானுடைய பாதத்தில் அமைதி, சந்தோஷம் அனைத்தும் மாலையிட்டு என்னை வரவேற்றன. பகவான் என்னைக் அமைதி என்னும் சொர்க்கத்திற்கு இட்டுச் சென்றதை நான் அறிந்தேன். நான் அவருடைய பாதத்தில் அனுபவித்த அமைதி மற்றும் சந்தோஷம் என்பதை வெறும் வார்த்தைகளால் அளவிட முடியாது. அதை அனுபவித்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ஒருவருக்கு உண்மையிலேயே பரத்துவம் என்பதன் அனுபவம் ஏற்படத்தான் செய்கிறது. நான் பகவான் ரமண மகரிஷியின் திருப்பாதத்தில் அமர்ந்திருந்த நேரங்கள் என் வாழ்வின் மிக ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவமாகும்.

இந்த ஆசிரமம் மிகப் பழமையானதாக இருந்தாலும் அந்த பழமையில் அதனுடைய பொலிவு இருக்கிறது. இது உண்மையிலேயே புனிதமான இடம். காற்றில் பகவானுடைய அன்பு மற்றும் அமைதி படர்ந்திருக்கிறது. குறிப்பாக பௌர்ணமி நாட்களில் திருமலையை சுற்றி வருவது மிகவும் உன்னதமாக இருக்கிறது. இரவின் இந்த ஆழ்ந்த அமைதியில் இங்கு ஒருவரால் கடவுளுடைய குரலை கேட்க முடியும்.

நான் தயக்கத்துடன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி இருந்தேன். இந்த இடத்தை மிகவும் நேசிக்கத் தொடங்கியிருந்தேன், எனவே கடைசி நாட்களில் மிகவும் வருத்தமாக இருந்தது. பகவான் “நீ எங்கு போனாலும் நான் உன்னுடன் இருப்பேன்” என்றார். இதோ அந்த நாளும் வந்துவிட்டது, என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. மதிய நேரத்தில் பகவானுக்கு முன் அமர்ந்திருக்கும் போது அவர் என்னை பார்த்து புன்னகைத்து “இவள் நாள் முழுவதும் அழுது கொண்டு இருக்கிறாள். அவளுக்கு என்னை விட்டு செல்வதற்கு விருப்பமே இல்லை” என்றார். பின்னர் நான் அவரிடம் சென்று அவருடைய ஆசீர்வாதத்தை பெற விரும்பினேன். அவரை பிரிந்து செல்வது என்பது என்னால் தாங்கவே முடியாததாயிருந்தது. கண்களில் நீர் வழிய பகவானுக்கு நமஸ்காரம் செய்தேன். அவர்தான் என்னுடைய தகப்பனார், தாயார், கடவுள் எல்லாமே. நான் அவருடைய குழந்தையாக என்றும் இருக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் அது அவருடைய பெயராலேயே இருக்க வேண்டும்.

இவர் மகரிஷியின் மகாசமாதிக்கு பிறகு பின்வரும் சொற்களை எழுதினார்.

ஒரு மெழுகுவர்த்தி சூரியனுக்கு என்ன அஞ்சலி செலுத்த முடியும்? நாம் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம், அதைக்கூட பேசுவதற்கு நம்மால் முடியவில்லை. அங்கு தங்கியிருந்த நாட்களில் அனுபவித்த அளவு கடந்த அன்பையும் மென்மையையும் வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது.ஒரு தாய் தன் குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு இருப்பது போல அவர் எங்களிடம் அன்பு செலுத்தி கொண்டிருந்தார். பகவான் தன் உடம்பை தன்னிலிருந்து வேறான ஒன்றாக கருதுவதை கண்டபோது சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னிருந்த இயேசு கிறிஸ்துவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய உடல் பலவீனம் அடைய அவருடைய முகம் மிகப்பொலிவுடன் விளங்க ஆரம்பித்தது அவருடைய கண்கள் இரண்டு நட்சத்திரங்களைப் போல ஜொலித்தன. தன்னிலே தான் மூழ்கியிருந்தார். மகாசமாதிக்கு சில நாட்களுக்கு முன்னால் அவர் சொன்னது, “இவர்கள் நான் இறக்க போகிறேன் என்கிறார்கள் ஆனால் நான் முன்பிருந்ததை விடவும் மிகவும் உயிர்ப்புடன் இருப்பேன்.” அவர் இப்பொழுது எங்கும் வியாபித்திருக்கிறார்.

ஜூரிக் (Zurich), ஜெர்மனியின் மிகப் பிரபலமான உளவியல் நிபுணர் டாக்டர். சி. ஜி. ஜங் சொன்னது: “மனிதனையும் உலகையும் விடுதலை செய்யும் இந்தியாவையே நாம் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்க்கையிலும் போதனைகளையும் காண்கிறோம், ஆயிரமாயிரமாண்டுகளின் மந்திர உச்சாடனம் அது.”

*

Face to face with Sri Ramana Maharishi – 10

Justice N. Chandrasekhara Aiyar was High Court Judge at Madras. I paid my homage to the sage only twice, and was struck by his large luminous eyes, through which the very soul peeps into us, as it were. When he fixes his keen gaze on us, it looks as though he is seeing the inner clockwork of a mechanism in a transparent case; and you get the feeling that a mild current of grace is flowing into you from him.

He is a veritable storehouse of spiritual energy and wisdom. He radiates shanti or Peace, and those who come into contact with him feel a subtle, pervasive and godly influence greatly spreading over them. Such men belong to a superlative category of their own. He speaks very little, but when he does speak his words roll out slowly, with deliberate and telling effect. His silence is however more eloquent than his speech. The tremor of his head is suggestive of the famous Upanishadic teaching – not this, not this.

Perfect detachment, indifference to pain and pleasure, absolute renunciation, true mental equipoise are hallmarks of the Indian rishis. Sri Ramana belongs to this great hierarchy of Seers.

To be in his presence is by itself a stirring experience in the elevation of the soul; to receive a few words of counsel from him is a rare blessing; to be the recipient of his benediction is to be assured of a special fortune.

11 Eleanor Pauline Noye of California visited the Ashram twice in 1940 and stayed for about ten months.

My heart throbbed with expectation as I was taken to the hall. As I entered, I felt the atmosphere filled with Sri Bhagavan’s Purity and Blessedness. One feels a breath of the Divine in the Sage’s presence. When He smiled it was as though the gates of Heaven were thrown open. I have never seen eyes more alight with Divine Illumination – they shine like stars. His look of Love and Compassion was a benediction that went straight to my heart. I was immediately drawn to Him. One feels such an uplifting influence in His saintly presence and cannot help but sense His extraordinary
spirituality.

It is not necessary for Him to talk, His silent influence of love and light is more potent than words could ever be. I do not think there is another like Him on earth today. To see Him is to love Him. As I looked upon Sri Bhagavan’s serene face and into His eyes which beamed with mercy, my soul was stirred. He knew how much I needed Him, while He looked straight into my heart. Everyone who comes to Him is blessed; the inner peace which is His is radiated to all.

I had not slept well for years, although I had been taking medicine. I said nothing to Sri Bhagavan about this. The amazing thing was that I slept soundly the first night and thereafter without taking any medicine. I received ‘the Medicine of all medicines’, the unfailing grace of the Lord. I arose next morning, feeling refreshed, as though I were born anew. Soon after, as I was standing by the gate one afternoon, Sri Bhagavan
stopped while on His way to the hill and asked me, “If I had more peace.” His loving solicitude made me feel quite at home; and when He smiled my joy knew no bounds.

When I left America, I longed for peace. Here at the feet of the Lord of Love, peace and happiness garlanded me and enriched my being. I know that Bhagavan led me to this heaven of rest. Mere words can never express the peace and joy felt in His Presence; it must be experienced. There one truly has a glimpse of the Eternal. The most Blessed experience of my life was my stay at the feet of Bhagavan Sri Ramana Maharshi.

The Ashram is so primitive, but therein lies its charm. It is truly the Holy-land. The air is permeated with His peace and love. On full moon night it is especially inspiring to go round the hill. In this deep silence and quietude one readily hears the voice of God.

I reluctantly made plans to leave the place. I had grown to love it and was very sad during those last days. Sri Bhagavan said, “I will always be with you, wherever you go.”
When the last day arrived, I could not stop crying. In the afternoon when I sat before Sri Bhagavan He smiled and said, “She has been crying all day; she does not want to leave me!” Later I went to Him for His blessings. The pain of parting was almost more than I could bear; with tears in my eyes I knelt with deepest reverence and devotion before my beloved Master. May He always be my Father, Mother and God; and may I always be His child, and whatever I do, may it be in His name.

She wrote the following after the Maharshi’s mahanirvana:
What tribute can a candle pay to the sun? What we best conceive, we fail to speak. Words cannot express the infinite love and tenderness we experienced during those days beside him. He seemed to clasp us to his bosom as a mother clasps her child. As we beheld his utter submission, one could not help but think of Lord Jesus before the crucifixion. Sri Bhagavan treated his body as something apart from him. As the body grew weaker his face became more radiant, his eyes shone like two stars.

He was ever abiding in the Self. A few days before he passed away, he remarked, “They say I am dying, but I shall be more alive than before.” Now he is all pervading.

Internationally renowned psychologist Dr. C.G. Jung of Zurich has said, “What we find in the life and teachings of Sri Ramana is the purest of India with its breadth of world liberated and liberating humanity, it is a chant of the millenniums.”

~ to be continued…!

Face to face with Sri Ramana Maharishi – 9 – Sanjiva Rao

இதன் தமிழ் பதிப்பை இங்கே காணவும்.

9

B. Sanjiva Rao, B.A. (Cantab.), belonged to the pre-Independence Indian Educational Service.

Bhagavan Sri Ramana Maharshi is a strange figure – one of the strangest and yet one of the most fascinating and striking personalities of all times. As a matter of fact he belongs not to any age, but to all ages, not to time but to eternity.

The Maharshi has renounced as valueless all that the modern world values most. He has no use for money; he is no
respecter of rank and position. His detachment is as complete as it is perfect. Nothing seems to possess the power to disturb his superpoise, his marvellous tranquility and peace. Tragedy does not move him in a personal way. Pilgrims who come to witness the yearly festival of lighting of the Beacon on the top of the Hill and worship it as the symbol of Siva, instinctively recognise the presence of that same power in the Sage and give to him the same worship.

There is little doubt that an ageless Wisdom, as old as the Heart of the Hill shines through those wonderful eyes which look with such perfect tranquility and yet such deep compassion upon the suffering world. The Maharshi is a living proof of the ancient advaitic thought. He demonstrates the reality of Self-transcendence. He states that the
Ego-less state is the natural, the real state, that the Ego-state is the unnatural and the false state. In the Ego-less condition, the true ‘I’ stands apart from the apparent reaction of the mind. The Sage watches the movements of the mind with the same objective detachment and impartiality as the scientific investigator of a physical phenomenon. The immediate effect of such self-scrutiny is quietening and stilling of the mind. The Maharshi represents a very perfect instance of the Ego-less state. He speaks little and only when he finds it necessary to do so. Silence is to him the most powerful expression of Being, which speech only hinders.

He uses the Power of this Silence in a most effective fashion. When any visitor presents him with a problem for solution, he vouchsafes no answer but retires in the depths of his own being. He becomes the embodiment of the very essence of Silence, and in that tranquil quietness, the visitor finds his mind becoming still under an
overpowering radiation from the sage. In that stillness, the problem dissolves and the visitor leaves the august presence marvelling what mysterious power has come to his aid. The Ego is the atom of the psychic world. If the disintegration of the atom has given us so much power, what may not be accomplished by the annihilation of this ego-self? The Sage of Tiruvannamalai can answer this question. He himself is the living answer.

~ to be continued…!

ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 9 – சஞ்சீவ ராவ்

Read the English version here.

9
பி. சஞ்சீவ ராவ், பி.ஏ (Cantab.) சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் கல்வித் துறையில் இருந்தவர்

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ஒரு வினோதமானவர் – மிக மிக வினோதமானவருள் ஒருவராய் இருப்பினும் எக்காலத்திலும் அளப்பரிய ஆச்சர்யத்தைத் தருபவர்களுள் ஒருவர். பார்க்கப் போனால் அவர் எந்தக் காலத்துக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக விளங்குபவரல்ல, அனாதிக்கு ஒப்பானவர், எக்காலத்திற்கும் ஏற்றவர்.

மஹரிஷி இவ்வுலகம் எதையெல்லாம் விலை மதிக்க முடியா உயர்ந்தது என்று கருதுகிறதோ அதையெல்லாம் விலையற்றது என்று ஒதுக்கி விட்டவர். பணத்தினால் அவருக்கு ஒரு பயனுமில்லை. பதவி, சமுதாய அந்தஸ்து இதையெல்லாம் கண்டு கொள்பவரல்ல அவர். அவருடைய பற்றற்ற நிலை பூர்ணமானது, மிக உன்னதமானது. அவருடைய தெய்வீக அமைதியை குலைக்கும் சக்தி எதற்கும் இருப்பதாய் தெரியவில்லை. சோகம் என்பது அவரைத் தனிப்பட்ட முறையில் பாதிப்பதில்லை. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்ற வரும் அடியார்கள் அண்ணாமலையை அந்த ஆதிசிவனாகவே வழிபடுவது வழக்கம். அவர்கள் அதே ஆதிசிவனின், அண்ணாமலையின் சக்தி மஹரிஷியிடம் இருப்பது கண்டு அண்ணாமலைக்கு, ஆதிசிவனுக்குத் தரும் அதே மரியாதை, பக்தியை அவருக்குத் தருகிறார்கள். அம்மலையின் இதயக்குன்றுக்கு ஈடான காலத்தால் ஒப்பிட முடியா ஞானம் அக்கண்களில் ஒளிவீசுகிறது, அதில் ஈடு இணையற்ற பேரமைதியும் அதே சமயம் உலகம் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்டு கருணையும் ஒருசேரக் காணக்கிடைக்கிறது.

புராதனமான அத்வைதக் கொள்கைக்கு மஹரிஷியே ஒரு வாழும் உதாரணம். தன்னைக் கடந்த நிலை என்பதின் உண்மையை அவர் கண்முன்னே நிரூபித்துக் காட்டுகிறார். தான் கடந்த நிலையே உண்மையான நிலை, இயற்கையான நிலை என்றும் தான் என்ற நிலை பொய்யான, செயற்கையான ஒன்று என்றும் கூறுகிறார். தான் கடந்த நிலையில் இருக்கையில் ‘நான்’ என்பது மனதின் வெளிப்பாடாக இல்லாமல் தனித்து தானேயாய் நிற்கிறது. மனதின் அசைவுகளை மஹரிஷி ஒரு அறிவியலாளர் எப்படி ஒரு ஆராய்ச்சியில் பாரபட்சமன்றி கவனிப்பாரோ அதே போல கவனிக்கிறார். அத்தகைய தனித்த பார்வை மனதை உடனேயே அமைதிபடுத்தி, நிலைநிறுத்தவும் செய்து விடுகிறது.

தான் என்ற நிலை கடந்த நிலையை மஹரிஷி மிக கச்சிதமாக நிறுவுகிறார். பேச வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டாலொழிய பேசுவதில்லை, அதுவும் வெகு குறைவாகவே. மெளனம் என்பது அவர் வரையில் இருத்தலின் மிக சக்தி வாய்ந்த வெளிப்பாடு, அதில் பேச்சு என்பது ஒரு தடையே. மெளனம் என்பதின் சக்தியை வெகு கச்சிதமான முறையில் வெளிப்படுத்துகிறார். வருபவர்களில் யாராவது ஒரு பிரச்சினையைக் கூறி உபாயம் தேடுகையில் அவருக்கு பதிலேதும் அளிக்காமல், பேசாமல் ‘தான்’ என்ற இயற்கை நிலையில் அமர்ந்து விடுகிறார் மஹரிஷி. மெளனம் என்பதன் முழு தாத்பரியமாகவே தான் ஆகி விடுகையில் வந்தவர் தன்னுடைய மனமும் மஹரிஷியிடமிருந்து வெளிவரும் சக்தியில் உள்ளடங்கி அமைதியில் ஊறி, தன்னுடைய பிரச்சினைக்கு ஒரு வழியைத் தானே கண்டு கொள்கிறார். ஒரு வார்த்தை கூட பேசத் தேவையில்லாமல் தன் கவலை தீர்ந்து எந்த மாய சக்தி தன்னுடைய உதவிக்கு வந்தது என்று வியந்த வண்ணம் விடைபெறுகிறார்.

ஸ்தூல உலகின் அணு தான் என்பது. இப்படி தான் என்பதில் இருந்து விலகி இருத்தல் இவ்வளவு சக்தி தருமானால், அந்த தான் என்பதே இல்லாமலிருந்தால்?! அண்ணாமலை வாழும் மஹரிஷி இதற்கு பதில் தருவார்.
அண்ணாமலை வாழும் மஹரிஷி இதற்கு பதிலுமாவார்!

Face to face with Sri Ramana Maharishi – 8 – Dilip Kumar Roy

இதன் தமிழ் பதிப்பை இங்கே காணவும்.

8 Dilip Kumar Roy

Dilip Kumar Royof Sri Aurobindo Ashram was a well-known personality of his time and has authored many books. He was a bhakta and a musician. Sri Ramana’s famous quote, “Bhakti is jnanamata”(the mother of jnana) was in reply to his query whether Sri Ramana advocated jnana and disparaged bhakti. 

I first heard of Ramana Maharshi when I was a member of the Ashram of Sri Aurobindo. I asked Sri Aurobindo about the Maharshi and he wrote back that he was a yogi of remarkable strength and attainments and that his tapasya had won ‘glory for India.’ On another occasion he characterised him as a ‘Hercules among the yogis.’ So I longed to pay a visit to Sri Ramanasramam.

When I arrived at the Ashram, I felt a deep malaise. How could I hope to get peace and inspiration from the Maharshi if I had failed to get it at the feet of my own Guru, who was surely no less great? Yet I felt sincerely that I had done well in coming to seek inspiration from the great yogi who was venerated by spiritual aspirants of every category.

I entered the hall of the great sage, where he has been living a singular life, blessing all, but belonging to none, interested in everything but attached to nothing. He gave the impression of Siva, the great God of compassion, living a blissful, free and open life, with no walls of ego to cabin the summit vision. What I saw impressed me deeply, though I find it far from easy to portray what I saw or rather experienced. Here was a man who lived like a god, supremely indifferent to all that we worldlings clamour for without cease. Dressed in a bare koupin (loincloth) he yet sat ensconced in grandeur of plenary peace and egoless bliss which we could but speculate upon, yet never fathom.
I touched his feet and then, without a word, sat down near him on the floor and meditated, my heart heaving with a strange exaltation which deepened by and by into an ineffable peace and bliss which lasted for hours and hours. Words seem utterly pale and banal the moment you want to describe an authentic spiritual experience, which is vivid, throbbing and intense.

Later, as I reclined, bathed in peace, in an easy chair under the stars at which I gazed in an ecstasy of tears, I felt deeply grateful towards the Maharshi. I recalled a pregnant saying of his: “Just be. All is in you, only a veil stands in between. You have only to rend the veil and then, well just be.” I had found this favourite remark of his rather cryptic till now. But at this moment I understood for the first time and wrote a poem in homage to the Maharshi.

The Maharshi’s self-obliviousness was enchanting for me. Greatness sat easily on him as beauty on a sunset cloud, but with a devastating effect. All our ideas as to how the great should act seem to be dismissed by him with a smile of simple disavowal. I saw with my own eyes day after day during my five-day stay at the Ashram of this unique sage, the like of whom I am sure is not to be met within this vast world.

I have never in my life of varied experience and wide travelling met a man so utterly indescribable and yet so profoundly moving. I cannot say why he moved me to my depths with eyes where no soft light of emotion presided, and yet it bathed me when I met his gaze with a peace that I find as unaccountable as it was delectable.

The Maharshi has not the slightest use for pretentiousness and self-importance. He is for no trappings either of speech or learning. I saw indeed a man, who in his exterior was anything but distinguished, far less handsome or captivating, and yet – how shall I put it – he was so  compelling and so disarming! I shall never forget how deeply stirred I was when I saw his austere yet kind face in the light of electric lamps. The peace I felt reminded me of the startled, though unvoiced query, of Paul Brunton [No. 1]: “Does this man, the Maharshi, emanate the perfume of spiritual peace as the flower emanates fragrance from its petals?”

I sang songs more than once in his presence. And everytime I was ravished by his kind glance and bewitching smile. I realised for the first time what is really meant by the word ‘sacred’.

Extracts from his poem:

To Sri Ramana Maharshi
O Son of Dawn! Who only knowest the Sun,
And through His eyes of Light see’st all that lies
Revealed – a flawless Plentitude which none
But Sun’s own children ever might surmise!

For only the chosen few so far have won
The Truth that shines beyond world’s wounds and cries;
Who see Thee, throned in the high dominion
Of Self’s invulnerable Verities,
Enjoy a glimpse of Bliss of the Beyond.
Thou singest: ‘Nay, ‘tis here’ – yet without Thy
Compassion’s pledge – how few would understand?
Homage to Thee, O minstrel of Clarity!

* * *

~ to be continued…!

ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 8 – திலிப் குமார் ராய்

To see the English version of this post, click here.


8 – திலிப் குமார் ராய்

அரவிந்த ஆஸ்ரமத்தின் திலிப் குமார் ராய் அச்சமயத்தில் வெகு பிரபலமானவராயும் பல புத்தகங்களை எழுதியவராயும் இருந்தார். அவர் ஒரு பக்தர், இசையாளர். அவர் ஸ்ரீ ரமணரிடம் அவர் ஞானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பக்தியை தள்ளுபவரா என்று கேட்டதற்கு பகவான் “பக்தியே ஞானமாதா” என்று பதிலுரைத்தார்.

“நான் அரவிந்த ஆஸ்ரமத்தில் இருந்தபோது முதன்முறையாக ரமண மஹரிஷி பற்றிக் கேள்வியுற்றேன். அவர் பற்றி ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டபோது அவர் ரமணர் யோகிகளில் மிக சக்தி வாய்ந்தவர் என்றும் அவருடைய தபஸ் இந்தியாவுக்கு பல பெருமைகளைப் பெற்றுத் தந்தது என்றும் பதில் எழுதினார். மற்றொரு சமயம் அரவிந்தர் ரமணரை “யோகிகளில் ஹெர்குலிஸ்” என்று விளித்தார். எனவே நான் ரமணாஸ்ரமம் செல்ல வெகு ஆவலாயிருந்தேன்.

ஆஸ்ரமம் வந்த போதோ எனக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. என் குருநாதரின் பாதங்களில் என்னால் அடைய முடியாத அமைதியை மஹரிஷியிடம் எவ்வாறு அடைய முடியும்? என் குருவானவரும் சாதாரணமானவரில்லையே? இருந்தபோதிலும் நானே என் செயலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன், நான் ஞானம் தேடி வந்திருப்பவர் ஆன்மிகப் பாதையில் எவ்வகையினராக இருந்தாலும் அவர்கள் மிக உயர்வுடன் குறிப்பிடப்படும் மஹரிஷியாவார்.

நான் அம்மஹா முனிவர் அமர்ந்திருந்த ஹாலுக்குள் நுழைந்தேன், அவர் அங்கே தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார், அனைவரையும் ஆசிர்வதித்துக் கொண்டு, அனைத்திலும் ஆர்வமுடையவராகவும் எதிலுமே பந்தமில்லாதவராகவும் இருந்து கொண்டிருக்கிறார். அவரிடம் எனக்கு சிவபெருமானின் அடையாளம் தெரிந்தது, கருணையின் மொத்த உருவமும், ஆனந்தமயமானவராகவும், எதிலும் அடங்காதவராகவும், அனைத்திலுமிருப்பவராகவும் இருக்கும் அந்த மஹாதேவனின் சாயல் தெரிந்தது. என்னை பெருவியப்பிலாழ்த்தியது நான் கண்டதா அல்லது உணர்ந்ததா என்று பேதப்படுத்துவது எளிதாக இல்லை. இதோ ஒருவர் கடவுளைப் போலவே வாழ்கிறார், நாம் எதன் பின்னாலெல்லாம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமோ அவைகளை ஒரு சிறிதும் பொருட்படுத்தாதவராய், வெறும் கெளபீனம் அணிந்திருந்தபோதும் அவரிடத்தில் இருந்த அமைதியும் தானென்ற உணர்வற்ற ஆனந்தமும் பெரும் அணிகலனாய் திகழ்ந்தது. அவைகளைப் பற்றி நாம் பேச வேண்டுமானால் செய்யலாம், உணர்வது?

நான் அவருடைய பாதங்களைத் தொட்டு பின் உடனே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தேன். என் இதயம் வினோதமான ஆனந்தத்தில் ஆழ ஆழ மூழ்கிக் கொண்டிருந்தது, பலப்பல மணி நேரங்களுக்கு. வார்த்தையால் விவரிப்பது என்பது முடியவே முடியாத, தெளிவான, ஒரே சீரான, வெகு அடர்த்தியான நேரடி ஆன்மிக அனுபவம்!

அமைதியின் தாலாட்டுதலில் நான் ஒரு ஈஸி சேரில் நட்சத்திரங்களுக்கு அடியில் சாய்ந்து அமர்ந்திருந்தது போலிருந்தேன், கண்களில் ஆனந்த பாஷ்பமாய் கண்ணீருடன். ஸ்ரீ ரமணரிடம் பெரிதும் நன்றிக் கடன் பட்டவனாயிருந்தேன். அவர் சொன்ன ஒரு ஆழமான சொல்லை நினைந்தேன், “அப்படியே இரு. அனைத்தும் உன்னுள் இருக்கின்றன, ஒரே ஒரு திரை மட்டும் தான் நடுவில் உள்ளது. நீ செய்யவேண்டியது அத்திரையை நீக்குவது மட்டுமே, அதன் பின், அப்படியே இரு.” இது நாள் வரை இந்த உபதேசத்தை ஒரு மர்மமான, புரியாத ஒன்றாய் நினைத்திருந்தேன். இப்போது முதன்முறை அதன் ப்ரத்யக்ஷம் எனக்கு நேர்ந்தது. மஹரிஷி பற்றிய கவிதை ஒன்றையும் எழுதி என் வணக்கத்தைச் செலுத்தினேன்.

மஹரிஷியின் தன்னுள் தானிருந்து சுற்றி நடப்பது எதுவும் பாதிக்காத தன்மை என்னை மிகவும் வசீகரித்தது. சூரிய அஸ்தமனத்தின் மேகம் போல அழகு போல மேன்மை அவரிடம் வெகு எளிதாக அமர்ந்திருந்தது, ஆனால் தூக்கியடிக்கும் அளவிற்கு. ஒரு பெரியவரான ஒருவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற நம் கணிப்பு, எண்ணம் அனைத்தையும் வார்த்தைகளற்ற வெறும் புன்னகையால் கரைத்து ஒன்றுமில்லாதவைகளாக்கி விடுகிறார். நான் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் அவரை தினம் தினம் கண்டு வந்தேன், தனித்துவம் வாய்ந்த இவர் போல மற்றொருவர் இந்தப் பரந்த உலகில் வேறெங்கும் காணக் கிடைக்க மாட்டார்.

என் வாழ்வில் நான் கண்ட பலவித அனுபவங்கள், விரிவான பிரயாணங்களில் இவரைப் போல வார்த்தைகளால் விவரிக்க முடியாததும், அதே சமயம் மிக மிக சக்திவாய்ந்த மாற்றத்தை உருவாக்குபவருமான யாரையும் நான் கண்டதேயில்லை. அவர் கண்களில் எந்த பந்த-பாச உணர்வும் தெரிவதில்லை, ஆனால் அக்கண்கள் என்னைக் காண்கையில் என்னை என்னுள் ஆழச் செலுத்தி வெகு உன்னதமான ஆனந்தத்தை அளிக்கும் அமைதியை நான் உடனே உணர்ந்தேன்.

அவரிடம் எந்த வித சுய தம்பட்டமோ நடிப்புகளோ துளிக் கூட இல்லை. அவர் யாரையும் எவ்விததிலும் ‘போதனைகளாலோ’ கட்டுப்படுத்தவேயில்லை.

நான் கண்ட இம்மஹரிஷி வெளிப் பார்வைக்கு குறிப்பிட்டுச் சொல்வதற்கான எதுவுமே கொண்டவர் அல்ல எனினும் – அதை எப்படிச் சொல்ல – அவர் எவ்வளவு பாதிக்கிறார் நம்மை! அவருடைய ஆசாரமான அதே சமயம் வெகு கனிவான முகத்தை மின்சார விளக்கின் ஒளியில் கண்ட போது என் மனது எப்படி ஆழமாக கிளர்ந்து எழுந்தது என்பதை நான் மறக்கவே முடியாது. பால் ப்ரண்டன் கூறிய சொற்கள் என் மனதில் ரீங்காரமிடுகிறது, “இந்த மனிதர், இம்மஹரிஷி, ஆன்மிக அமைதி என்ற நறுமணத்தை மலர்கள் அதனுடைய இதழ்களில் இருந்து வெளிவிடுவதைப் போல வெளிப்படுத்துகிறாரா?”

அவர் முன்னிலையில் பாடல்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாடினேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கனிவான புன்சிரிப்புடன் கூடிய பார்வை என்னைக் கவர்ந்து கொண்டேயிருந்தது. முதன் முறையாக நான் அவ்வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டேன் – புனிதம்!

கவிதைகளில் சில:

ஸ்ரீ ரமணருக்கு,

விடியலின் செல்வனே! சூரியனை மட்டும்
ஞானத்தின் கண்கள் கொண்டு அனைத்தையும் –
அனைத்தும் வெளிபடுத்தப் பட்டுக் காண்பவனே
சூரியனின் புதல்வர்கள் மட்டுமே உணரக்கூடிய
குறையேதும் இல்லாத நிறைவே!

தேர்ந்தெடுத்த சிலர் மட்டுமே இவ்வுலகின்
காயங்களுக்கும் அழுகைகளுக்கும் பின்
பளிச்சிடும் அவ்வுண்மையைக் கண்டவராகிறார்;
மிகவுயர்ந்த ஸ்தானத்தில் வீற்றிருக்கும் – உண்மையின் ஸ்வரூபமான –
யார் உமைக் காண்கிறாரோ
அவர் கணநேரமாயினும் அனைத்துங்கடந்த ஆனந்தத்தை அனுபவிப்பர்.
நீர் பாடுகிறீர் – ‘இல்லை, அது இங்கே இப்போதே இருக்கிறது’ என்று –
இருப்பினும் ஐயா உமது கருணையின்றி – அச்சிலரும் எவ்வாறு உணர்ந்திடுவார்?
தெளிவெனும் இசைவாணரே, உமக்கு என் அஞ்சலி!

ஆங்கில மூலம்:

To Sri Ramana Maharshi

O Son of Dawn! Who only knowest the Sun,
And through His eyes of Light see’st all that lies
Revealed – a flawless Plentitude which none
But Sun’s own children ever might surmise!

For only the chosen few so far have won
The Truth that shines beyond world’s wounds and cries;
Who see Thee, throned in the high dominion
Of Self’s invulnerable Verities,
Enjoy a glimpse of Bliss of the Beyond.
Thou singest: ‘Nay, ‘tis here’ – yet without Thy
Compassion’s pledge – how few would understand?
Homage to Thee, O minstrel of Clarity!

ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 3 & 4

Read the English version here.

3
ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 3 – ஃப்ரொபஸர் பேன்னிங் ரிச்சர்ட்ஸன் எம்.ஏ (Hons) (Cantab), A.B (Princeton)

திரு. ரிச்சர்ட்ஸன் 1930 இல் புது தில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் காலேஜில் ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்க வந்தவர். A Search in Secret India (no. 1) இல் மஹரிஷி பற்றிப் படித்து மெய்மறந்து:

“மஹரிஷியின் முன் ஒரு உள்ளார்ந்த ஆனந்தத்தை நான் உணர்ந்தேன், அது என் உணர்வின் மீது படர்ந்து எண்ணுவது என்பதையே ஒரு தேவையற்றதாக்கி விட்டிருந்தது. ஆன்மிகத்திலேயே மிகவும் புனிதமான வகையின் சமீபத்தில் வந்து இருக்கிறேன். மஹரிஷியுடன் இருக்கையில் ஆனந்தம், அமைதியினால் நான் நிரம்பியிருந்தேன், கேள்வி கேட்பதற்கு ஆசையே எழவில்லை. நான் அங்கிருந்த 3 நாட்களும் (1937) இதே நிலை தான்.

தவற்றைப் புறக்கணிப்பதாலேயே ஒருவரை நல்லவர் என்று சொல்லமுடியாது, ஆனால்
அவருடைய அன்பானது சூரியனின் ஒளி போல அனைவரிடத்திலும் ஒரே மாதிரி வெளிப்படும் போது உடனடியாக தெரிவது என்னவென்றால் ‘உலகின் பார்வையில்’ மதிக்கப்படும் ஒன்றல்லாமல் நிஜமாகவே ஒரு மாணிக்கம், மரகதம் போன்ற ஒப்பற்றவர். தரத்தினால் வித்தியாசப்படுபவர் மட்டுமல்ல, அவரே ஒரு தனித்துவமானவர். இயேசுபிரான் 2000 ஆண்டுகளுக்கு முன் போதித்த “நான் என் தந்தையுள் இருக்கிறேன், என் தந்தை என்னுள் இருக்கிறார். நானும் என் தந்தையும் ஒன்றே” என்பது திருவண்ணாமலையில் வாழும் இம்முனிவர் போதிப்பதும் அதையே.

4

 

ஜஸ்டிஸ் திரு. கே. சுந்தரம் செட்டியார் B.A. B.L – சென்னை உயர்நீதிமன்றம்

சுந்தரம் செட்டியார் அவர்கள் பி.வி. நரசிம்ஹ சுவாமி 1931 இல் எழுதிய பிரபலமான Self Realization என்னும் ரமண சரிதத்தில் முன்னுரை எழுதினார்.

திருவண்ணாமலையின் மாவட்ட முன்சீப் ஆக 1909, 10 மற்றும் 1911 ஆம் ஆண்டின் முதற்பகுதியிலும் இருந்த நாட்கள் என்னைப் பொறுத்தவரை மிகவும் மங்களகரமானவை என்று கருதுவேன், ஒரே காரணம் நான் இச்சமயம் அருள்மிகு பகவானின் பாதங்களுக்கடியில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றேன். அவரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போதும் அவர் மீது பக்தி அதிகரித்துக் கொண்டே போனது. அவர் ஞானத்தின் ஊற்று. எளிதில் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் மிகவும் தெளிவாக பதில் பெற்றது. இது ஒரு ஜீவன்முக்தரிடத்தில் இருந்து அல்லாமல் வேறொருவரிடத்தில் இருந்து வருவது சாத்தியமே இல்லை. அவர் தன்னில் அனைத்தையும் அனைத்திலும் தன்னைக் காண்கிறார். உலகில் என்ன நடந்தாலும் அது அவருடைய அமைதியை அசைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அவர் அனைத்திலும் எதிரும் புதிருமாய் தெரியும் த்வைதத்தைக் காண்பதைத் தாண்டி அனைத்தையும் ஒன்றேயான அதன் ஒளியில் காண்கிறார். ஒரு போதும், ஒரு போதும் அவர் தன்னுடைய சொந்த விருப்பத்துக்காகவோ வேறேதோ ஒன்றை நிறைவேற்றுவதற்காகவோ சொல்லவில்லை. பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கும் “ஸ்திதப் ப்ரஞர்” என்பதற்கான அனைத்து அடையாளங்களும் இவரிடத்தில் இருக்கின்றன.

அவருடைய இருப்பே ஒரு அமைதியை நிலவச் செய்கிறது. அது அவரை உண்மையான நம்பிக்கை மற்றும் நேர்மையுடன் சந்திக்க வரும் அனைவரும் உணருகின்றனர். சில கேள்விகளுடன் அவரைச் சந்திக்க வரும் சிலரில் அக்கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்தது. சில சந்தேகங்கள் அவர் முன் பேசாமல் அமர்ந்திருந்த போதே தெளிவடைந்தது, மஹரிஷி ஒரு வார்த்தை பேசாமலிருக்கும் போதும்!

Face to face with Sri Ramana Maharishi 3 & 4

இதன் தமிழ் பதிப்பை இங்கே படிக்கவும்.

Prof. Banning Richardson, M.A. (Hons.) (Cantab.), A.B. (Princeton)

Prof. Banning Richardson, M.A. (Hons.) (Cantab.), A.B. (Princeton), came to teach English literature at St. Stephens College, Delhi, in the 1930s. He felt ‘ravished’ by the description of the Maharshi in A Search in Secret India (no. 1).

In the presence of Sri Ramana Maharshi I felt an inward joy, which suffused my consciousness, and made thinking seem superfluous. I had come into touch with spiritualism of the finest type. When I was in the presence of the Master I was so filled with joy and peace that the desire to ask questions disappeared.This happened throughout the
brief three days [In May 1937] I stayed at Sri Ramanasramam. When one comes into the presence of a man who is ‘good’ notcmerely because he shuns ‘evil’ but because his love is universal and falls alike on the just and unjust, then one experiences immediate recognition of a soul that is not great as the world values greatness, but great when
compared to an absolute standard of values – a precious stone, an emerald without flaw. It is a difference not merely of quality, but of kind. What Jesus the Christ taught 2000 years ago that “I am in my Father and my Father is in me. My Father and I are one” is the same as He who teaches today at Tiruvannamalai.

4
Justice K. Sundaram Chettiar, B.A., B.L., of Madras High Court

Justice K. Sundaram Chettiar, B.A., B.L., of Madras High Court wrote a foreword to the first well-known biography of Sri Ramana by B.V. Narasimha Swami entitled Self Realization (1931).

The years 1909 and ’10 and the earlier part of 1911, when I was the District Munsif of Tiruvannamalai, I deem it to be auspicious in my life for the only reason that I had the privilege of sitting at the feet of Sri Bhagavan.The more I came in contact with him, the greater was my devotion to him. Sri Bhagavan is a mine of Wisdom. Questions on abstruse
subjects have been answered with clarity and directness, which would not be possible except for a realized soul or jivanmukta. He sees everything in himself and himself in everything. Whatever seems to happen in the world is incapable of affecting his peace, which passeth understanding. He has gone beyond the pair of opposites and looks at events in the light of the Absolute. At no time the Sage has done anything on his own initiative as if he has a particular desire for something, nor he has directed others to do anything in fulfilment of any purpose. He has all the characteristics of a sthitaprajna described in the Gita. His very presence generates an atmosphere of peace which
is felt by devotees visiting him with sincerity and faith. Some of those who approached him with a few questions in their mind found that the answers were given anticipating their questions. Some find their doubts cleared while sitting silently within his aura, without any speech by him

ஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – சாது ஏகரஸ

To read the English version of this post, click here.

சாது ஏகரஸ (டாக்டர் ஜி.ஹெச். மீஸ், M.A., L.L.D.) எனும் டச்சு அறிஞர் மஹரிஷியிடம் 1936 அன்று வந்தார். அவரைப் பொறுத்தவரை முதல் முறையிலிருந்தே அவருக்கு மஹரிஷியிடம் ஆழமான பக்தி ஏற்பட்டது.

கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) அவர்கள் வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே (Wen-Poh-Hsuche-Tse) அவர்களைச் சந்தித்த போது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ட்ஸே-லு அவரிடம், “மாஸ்டர், தாங்கள் வெகு நாட்களாக வென்-பொஹ்-ஹ்சுஷே-ட்ஸே வை சந்திக்க விரும்பினீர்கள், ஆனால் இப்போது அவரைக் கண்டபின் ஏன் ஒரு வாத்தை கூட பேசவில்லை?” என கேட்க, கொன்-ஃபூ-ட்ஸே (Kon-Fu-Tse) “இவரைப் போன்றவர்களை வெறுமனே பார்த்தாலே போதும், பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை. இவரைப் பற்றிய அனுபவம் ஏற்பட ஒரு முனிவரை சந்தித்திருக்க வேண்டும்” என்றார்.

மஹரிஷியை முதன்முதலில் பார்த்த போது அதே அனுபவம் ஏற்பட்டது எனக்கு, ஒருமுறையல்ல, மறுபடி மறுபடி நான் அங்கு சென்று அவரைப் பாக்கும்போதெல்லாம், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அங்கு நான் அவருடன் எந்தத் தடையுமின்றி தங்கியிருந்த மூன்றாண்டுகள். பலர் பல முறை என்னிடம் கேட்டுக் கொண்ட போதும் அவரைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு வெகு கடினமாய் இருப்பதும் மேல்சொன்ன இதே காரணம் தான். தன்னில் தான் ஆழ்ந்து இருக்கும் ஒரு முனிவரைப் பற்றி செயிண்ட் டியானிசியஸ் சொன்னது நன்கு பொருந்துகிறது, “கடவுளைப் பற்றி நீர் சொல்வது அனைத்தும் பொய். கடவுள் என்பவர் சொற்களுக்கு அப்பாற்ப்பட்டவர். எனவே நீர் கடவுள் பற்றி சொல்வது அனைத்தும் வேறெதையோ தான் குறிக்கிறது.” எனவே இந்தியாவில் யாரேனும் என்னை மஹரிஷி பற்றி பேசவோ எழுதவோ சொன்னால் அவர் மஹரிஷியை சந்தித்து தானே பார்த்துக் கொள்ள வெண்டியது தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலைநாட்டினர் என்னிடம் அடிக்கடி கேட்பது இன்னொன்று: “மஹரிஷி என்னதான் செய்வார்?” இதற்கு ஒருவேளை இப்படி பதில் சொல்லலாம், “அவருடைய தினப்படி வேலை அவர் அவராகவே இருப்பது மட்டுமே”. ஏனெனில் அவர் இவ்வேலையில் மிகவும் வெற்றியடைந்தவராய் இருக்கிறார், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறார். அவர் தரும் மாற்றம் என் போன்றவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் ஒன்றும் ‘செய்யாமல் செய்வது’ இதைத் தான். இவருக்கு முன்னால் இப்பூமியில் வாழ்ந்த ‘தி க்ரேட்’ கள் அனைவரும் ஏதோ ஸ்கூல் பையன்கள் மாதிரி தெரிகிறார்கள். மைசூரின் மறைந்த மஹாராஜா அவர் முன் பவ்யமாக மண்டியிட்டு, கண்களில் தாரை தாரையாக நீர் பெருக்கிக் கொண்டு ஏதும் அசைவற்று நின்று கொண்டிருந்தார். பின் மற்றொரு முறை தண்டனிட்டு விட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வெளியேறினார்.

ஒரு மனிதன் உலகில் செயற்கரிய செயல் எதையேனும் செய்து விட்டு மஹரிஷி முன் வந்தமர்ந்தால் அவர் உணரும் விஷயம், மஹரிஷியின் தன்னைத் தான் உணர்ந்து அதில் லயித்திருக்கும் செயலுக்கு முன்னால் தான் செய்தது ஒன்றுமே இல்லை என்பது தெளிவாகும்.

யாரேனும் உலகிலேயே மிகச்சிறந்த புத்தகமொன்றை எழுதி விட்டு அதை மஹரிஷிக்கு சமர்ப்பிக்க வந்தால் மஹரிஷியே ஒரு பெரும் புத்தகம் என்பதையும், அது எழுத்தாணியோ, இங்க்கோ பேப்பரோ இன்றி, எந்தவித முயற்சியுமின்றி, யாரும் நடுநிலை வகிக்கத் தேவையின்றி, ஒவ்வொரு நாளும் தன்னை நாடி வருபவர் விரும்பினால் படிக்க இயலும் பெரும் புத்தகம் என்பதையும் அறிவார்.

மற்றைய பெரியோரிடத்தில் சொல் மற்றும் செயல், ஆன்மிகம், புத்திகூர்மை ஒருபுறமும் செயலாற்றல் என்பது மறுபுறமும் இருப்பதை எளிதாகக் காணலாம். மஹரிஷியிடம் ஆனால் இத்தகைய வேறுபாடுகள் இருந்ததேயில்லை.

மஹரிஷி காலம் என்பதைக் கடந்தவர். அவரின் நிலைத்த தன்மை அவர் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் பார்வையிலும் தனித்துவமாக தெரிகிறது. அத்தன்மை அவரை நாடி வந்து அவரிடத்தில் இருக்கும் அனைவருடைய அந்தராத்மாவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. அத்தன்மை புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் வெகு சொற்பமாகவே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. பின் வேறெப்படி இருக்குமது? யாரால் விளக்க முடியும் உண்மையை, கடவுளை? ஒரு வேளை முடிந்தாலும் கடவுளின் மைந்தனை, உண்மையில் ஸ்வரூபத்தை எவ்வாறு விளக்க முடியும்?

பல்வேறு சன்யாசிகளையும், முனிவர்களின் வாழ்வு, போதனைகள் பற்றி படித்தபின் மிகத் தெளிவாகத் தெரிவது ரமண மஹரிஷி இவர்களில் தனித்து நிற்கிறார் என்பதே. கடவுளின் சாக்ஷாத்காரம் என்பதை எவர் ஒருவரும் கடவுளின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அடைந்ததில்லை. ஸ்ரீ ரமணருக்கு ‘தீக்ஷை’ அருணாச்சலம் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கிடைத்துவிட்டது, அதுவும் அச்சொல் ஒரு பயணம் பற்றிய விவரத்தைச் சொல்வதற்காக மட்டுமே சொல்லப்பட்டது.

ஸ்ரீ ரமணர் தன் ஆன்மிகப் பாரம்பரியத்தை அப்படி ஒரு பாரம்பரியம் அடைய இருக்கிறது என்று யாரும் சொல்லாமலேயே அடைந்து விட்டார். குரு, இருளை அகற்றுபவர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் ஆகிறார் ரமணர். அவருடைய வழிமுறையானது மிக மிக நேரானது, ஏனெனில் அது மிக எளிதானதும். அப்படி நேராக, மிகத் தெளிவாக இருப்பதாலேயே பலருடைய கவனத்திலுமிருந்து அது எளிதாக விலகி விடுகிறது. அவரை நாடி வருபவர்கள் வேறெதையோ, ஏதோ நிச்சயமான ஒன்றைத் தேடி வருகிறார்கள், அதுவே நிச்சயமற்றதாய் விடுகிறது. அவர்களுக்கு தங்களுடைய நிஜ ஸ்வரூபத்தை அறியச் செய்யும் தீக்ஷைக்கும் தமக்கும் நடுவே தாங்களேதான் தடையாக நிற்கிறார்கள் என்பதை அறிவதில்லை.

மஹரிஷியிடம் பல முறை அவர்கள் தீக்ஷை, அருள், ஆன்மிக அனுபவம், கருணை முதலியவற்றைத் தருமாறு வேண்டுவதுண்டு, அதற்கு அவர் “நான் இவற்றை எப்போதும் தந்து கொண்டுதான் இருக்கிறேன், அதை நீங்கள் உணர முடியாமல் நான் என்ன செய்வது?” என்று சொல்வதுண்டு.

பல குருமார்கள் தங்களை ஆன்மீக மேன்மையை எப்போதும் கருத்தில் கொண்டவர்களாக இருப்பதைப் போல் அல்லாமல் மஹரிஷி அனைவரிடத்திலும் அவர்களுக்கே தெரியாமல் இருந்த போதிலும் அவர்கள் கடவுளின் உள் ஒளியைத் தங்களுக்குள் கொண்டவர்களாக இருக்கும் எதிர்கால ஞானிகள் என்றே கருதினார். அவர் கூறிய சில வார்த்தைகள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹுயி நெங்க் சொன்னதுடன் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள் – “புத்தருக்கும் சாதாரணமானவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், அவர் உணர்ந்ததை (realizes) இவர் தூக்கியெறிந்து (discards) விடுகிறார் என்பதே”. மஹரிஷி கூறுவது: ஆன்மீகப் பாரம்பரியம் என்பது எப்போதும் உள்ளதே, அதை ஸ்வீகரித்துக் கொள்வதற்காக அது காத்துக் கொண்டிருக்கிறது, கடவுள்-தன்மை அனைவரின் இதயத்திலும் உள்ள ஒன்று தான்.

சாதாரணமான மனிதர் மஹரிஷியைக் கண்டு பரிதாபப்படக் கூடும், அடடா வாழ்க்கையின் அவ்வளவு சுகங்களையும் இவர் இப்படி பார்க்காமல் இருக்கிறாரே என்று. மஹரிஷி ஆனால் இம்மனிதர்களைக் கண்டு பரிதாபப்படுகிறார் – இவர்களுக்கு நிஜமான சுகம் என்றால் என்னவென்றே தெரியவில்லையே என்று!

ஓய்வின்றி, சதா மாற்றம் மற்றும் அசைவில் திளைத்து உளையும் ஒரு உலகாயத மனதிற்கு ஐம்பது ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பது என்பதே ஒரு அசகாய செயல் போலத்தான் தெரிகிறது. இது ப்ரத்யேகமானதும் கூட. ஆனால் மஹரிஷி இதையெல்லாம் எந்த அசகாயத்தனத்திலும் சேர்ப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை. அவர் உலகின் காந்தத்தை, தன் இதயத்தின் மையத்தைத் தன்னகத்தே கொண்டு, தன் தந்தையான அருணாச்சலேஸ்வரர் போலவே அசைவற்றவராகி விட்டார்!

சாது ஏகரஸவின் கவிதைகளில் இருந்து:

ஸ்ரீ ரமணருக்கு இதயத்தின் அஞ்சலி

ஒப்பாரில்லாத, அனைவரின் தாய்-தந்தையுமான மஹரிஷிக்கு
எவரில் சிவமும் சக்தியும் என்றும் ஆனந்தத்தில் இணைந்திருக்கிறதோ
எவரின் இருப்பு இதயத்தை மகிழ்விக்கிறதோ,
எவருடைய லீலை அனைவரின் ஆச்சர்யமாக இருக்கிறதோ –
அவருக்கு மனம், இதயம், உடம்பு – படைப்புகள் அனைத்தும் சமர்ப்பணம்!

***

எதிர்கால சந்ததியினர் ஒருக்கால்
மஹரிஷியின் ப்ரத்யேகம் என்னவென்று
நான் சொல்வேன்; எதுவாயினும், அது நிச்சயத்தன்மை;
அசைவற்ற பாறை தரும் பாதுகாப்பு போல,
புயலால் தாக்குண்டும் அசைவற்றிருக்கும் கடல் போல,
கம்பீரமான மெளனத்துடனிருக்கும் மாமலை போல,
தத்துவங்களாலும் கொள்கைகளாலும் சதா அலையுறும் உலகில்,
ஆம், உண்மையில் நீரே ‘அருணாச்சலத்தின்’ முனிவரே!

***