மாதவஸ்வாமி

மாதவஸ்வாமி பகவான் ரமணருக்கு 12 வருடங்கள் மிகச் சிறந்த சேவையாற்றியவர். அவரைப் பற்றி பகவான் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசிய இரண்டு நிகழ்வுகள்இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ரமணாஸ்ரமத்திலிருந்து சூரி நாகம்மாவின் கடிதம் 12 ஜூலை 1946 மாதவஸ்வாமி ஒரு மலையாளி. பாலக்காட்டின்அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். பிரம்மச்சாரி. அப்போது 20 வயதே ஆன அவர் இங்கே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வந்து பகவானுக்குத் தனிப்பட்ட சேவையாற்றினார். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் விருப்பமுடையவராயிருந்த காரணத்தினால் அவ்வவ்போது வெளியே செல்வதும் […]

ரமணரின் கருணைக்கு எல்லை ஏது!

ஒருமுறை… குளித்துவிட்டு வந்ததும் அந்தக் கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது நாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும்! இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று! இதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் […]