என்ன ஆனார்கள் ததாஸ்து தேவர்கள்?

என் பாட்டி சிறு வயதில் சொல்வதுண்டு. நீ பேசுவதெல்லாம் நல்லதாக இருக்கணும் என்று. ஏன் என்று கேட்டதற்கு “ததாஸ்து தேவர்கள்” வீட்டின் நாற்புறத்திலும் இருப்பார்கள். நீ என்ன சொன்னாலும் “ததாஸ்து, ததாஸ்து” அதாவது “அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்றார். அதனால் தான் நம் வீடுகளில் மங்கல வாத்தியங்களை ஒலிப்பதும், மந்திரம், ஸ்லோகம் மற்றும் தெய்வ வழிபாட்டுப் பாடல்கள் என்று வரையறுத்துள்ளார்கள் என்றும் கூறினார்.   மிக நல்ல விஷயமாயிற்றே இது! […]