பக்தி மணம் – ஸ்ரீ பெரியதாசர்

தஞ்சையை ஆண்ட கடைசி சில மன்னர்களில் ஒருவன் மன்னார் நாயுடு (சரித்திர ரீதியில் ஏதோவொரு ஜமீந்தாராகவும் இருக்கலாமென்றிருக்கிறது). தெய்வ பக்தியுள்ளவனாயினும் கூடாதார் நட்பு கொண்டவனாயிருந்தான்.   அவனிடம் சேஷாசல செட்டியார் என்பவர் ஷராப் ஆக இருந்து வந்தார். அவர்தம் மகன் பெயர் பெரியசாமி. மிகுந்த தெய்வ பக்தியுள்ளவர். தாமரை இலைநீர் போல உலகவாழ்க்கையில் இருந்து வந்தார். அவருடைய தெய்வ பக்தியைக் கண்ட மக்கள் அவரை பெரியதாசர் என்று அழைக்கலாயினர். ஒரு நாள் அரசன் புலவர்களை நோக்கி  “இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு […]